India oi-Jeyalakshmi C
Published: Friday, June 16, 2023, 8:00 [IST]
இம்பால்; மணிப்பூரில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 100 பேர் உயிரிழப்பு என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் சேர்க்கக் கோரி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியால் இந்த இனமோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இம்மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது. மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் Nemcha Kipgen என்பவரது வீடும் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குக்கி இனக் குழுவினரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நிலைமையை ஆராய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அம்மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 100 பேர் உயிரிழப்பு என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை தோல்வியடையச் செய்துவிட்டு பிரதமர் முற்றிலும் மவுனம் காக்கிறார், அமைதியை நிலைநாட்ட அனைத்து கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Violence has reached its peak in Manipur. Union Minister RK Ranjan Singh house has been set on fire by rioters. Rahul Gandhi said that 100 people lost their lives in the 40 days of violence in Manipur.
Story first published: Friday, June 16, 2023, 8:00 [IST]

