விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின எனவும் தெரிவிக்கப்படுகிறது. அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற பட்டாசு தொழிற்சாலை விபத்துக்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன இது மாவட்ட நிர்வாகத்தின் தவறே காரணம் எனவே பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும் அங்கு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் என்று ஒருத்தர் இருப்பார் அவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி எடுத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தில் ஏழை மக்கள் பாதிப்படைய மாட்டார்கள்