ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர்களின் அன்பான அலப்பறைகளும் சமூக ஊடகங்களில் அதுகுறித்து பதிவிடுவதும் தொடங்கிவிடும். பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் ரோஸ் டே, பிராமிஸ் டே, கிஸ் டே என்று வரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நேரத்தில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலித்துத் திருமணம் செய்தவர்கள், திருமணமாகி காதலிப்பவர்கள் என காதலர்கள் அனைவரும் ஒரு சிறிய சுற்றுலா சென்றுவந்தால் நன்றாகத்தானே இருக்கும்…
வீடு, வேலை, உறவுகளின் பல பிரச்னை என பரபரப்பான வாழ்க்கையை ஒரு சில நாள்களுக்கு விடுத்து, இருவருக்குமான நேரமாக, இயற்கையுடன் ஒரு சுற்றுலா சென்று இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாம்.
அப்படி, இந்தியாவில் காதலர்கள் பயணிக்கக் கூடிய(வேண்டிய), காதல் நிறைந்த 10 மலைப் பிரதேசங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று பார்க்கலாம்…
