Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

10 ஆண்டுகால முயற்சிக்குப் பலன்.. இயற்கை வாழ்விடத்துக்குத் திரும்பிய 2 கானமயில்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2026
in அரசியல் செய்திகள்
0
10 ஆண்டுகால முயற்சிக்குப் பலன்.. இயற்கை வாழ்விடத்துக்குத் திரும்பிய 2 கானமயில்கள்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 04, 2026 3:52 PM IST

இந்த முயற்சியின் அனுபவங்கள், எதிர்காலத்தில் பறவைகளை பாதுகாக்கும் நடைமுறைகளை அறிவியல் ரீதியாக மேம்படுத்த உதவும்

ராஜஸ்தான் மாநிலப் பறவை  கானமயில்
ராஜஸ்தான் மாநிலப் பறவை கானமயில்

ராஜஸ்தானின் மாநிலப் பறவையான கானமயில் (Great Indian Bustard–GIB) இனத்தைப் பாதுகாக்க, கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் முக்கிய நடவடிக்கையாக, ஜெய்சால்மர் பாலைவன தேசியப் பூங்காவில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட இரண்டு கானமயில் பறவைகளை இயற்கை வாழ்விடத்திற்குள் அறிமுகப்படுத்தும் செயல்முறை தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரடியாகவும், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆகியோர் காணொலி மூலமாகவும் இதில் பங்கேற்றனர்.

ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், இதன் எண்ணிக்கையை அதிகரித்து இயற்கை வாழ்விடத்தில் அவை வசிக்கும் கட்டத்துக்கு முன்னேறியுள்ளன. இந்த முயற்சியின் அனுபவங்கள், எதிர்காலத்தில் பறவைகளை பாதுகாக்கும் நடைமுறைகளை அறிவியல் ரீதியாக மேம்படுத்த உதவும்.

ராம்தேவ்ராவில் ₹9.25 கோடியில் அமைக்கப்பட்ட பறவைக் கூடம், பறக்கும் திறன், இயற்கை நடத்தை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம், ராம்தேவ்ரா மையங்களில் தற்போது 97 பறவைகள் உள்ளன. அவற்றில் 57 பறவைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை.

Hon’ble PM Shri @narendramodi ji’s vision is driving sustained efforts to protect India’s rich wildlife and endangered species.


Building on this vision, HMEFCC Shri @byadavbjp released two male Great Indian Bustards into the wild at Sam, Desert National Park, Jaisalmer.

The… pic.twitter.com/HINeDAh1rB

— MoEF&CC (@moefcc) October 4, 2026

தார் பாலைவன சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய இனமாக விளங்கும் கானமயில் பாதுகாப்பினால் சூழலியல் நன்மைகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்தார். இந்தத் திட்டத்தின் வெற்றியானது சூழல் சுற்றுலா வடிவில் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதாரப் பலன்களையும் பெற்றுத்தரும் என்று பூபேந்தர் யாதவ் கூறினார்.



.

Previous Post

கேதர்நாத் யாத்திரை: இன்றைய வானிலை நிலவரம் என்ன? ஹெலிகாப்டர் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Kedarnath Yatra Update: Today’s Weather Forecast, Helicopter Booking Rules & Travel Guidelines 2026

Next Post

சென்னை விமான நிலையத்தில் இன்று திடீர் விமான தாமதம்.. பயணிகள் கவனத்திற்கு! கிளம்பும் முன் இதைச் சரிபார்க்கவும் | Chennai Airport Flight Status Today: Delays, Cancellations, And Travel Tips (2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான நிலையத்தில் இன்று திடீர் விமான தாமதம்.. பயணிகள் கவனத்திற்கு! கிளம்பும் முன் இதைச் சரிபார்க்கவும் | Chennai Airport Flight Status Today: Delays, Cancellations, And Travel Tips (2026)

சென்னை விமான நிலையத்தில் இன்று திடீர் விமான தாமதம்.. பயணிகள் கவனத்திற்கு! கிளம்பும் முன் இதைச் சரிபார்க்கவும் | Chennai Airport Flight Status Today: Delays, Cancellations, And Travel Tips (2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In