Last Updated:
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 75 சதவீதம் சரிந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 75 சதவீதம் சரிந்துள்ளது.
தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தொகையின் கணக்குகள் குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. இந்நிலையில், 2025 – 26 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 130 கோடியே 69 லட்ச ரூபாய் நன்கொடை கிடைத்ததாக தெரிய வந்துள்ளது.
மக்களவை தேர்தல் நடந்த 2024 – 25 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 517 கோடியே 39 லட்ச ரூபாய் நன்கொடை கிடைத்த நிலையில், மறு ஆண்டே 75 சதவீதம் வரை சரிந்துள்ளது. 2025 – 26 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 130 கோடியே 69 லட்ச ரூபாய் நன்கொடை கிடைத்திருக்கிறது. கடைசியாக 2015 – 16 நிதி ஆண்டில் 141 கோடி ரூபாய் பெற்ற நிலையில், ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை சரிந்துள்ளது.
அதேநேரம் 2024 – 25 நிதி ஆண்டில் பாஜக 6 ஆயிரத்து 74 கோடியே 2 லட்ச ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை விட 12 மடங்கு கூடுதலாக பாஜக பெற்றது குறிப்பிடத்தக்கது.

