
NEET PG கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 0 மற்றும் 0 க்கு குறைவான மார்க் எடுத்தாலும் ( நெகடிவ் மார்க்ஸ் ) NEET PG நுழைவு தேர்வு எழுதி மருத்துவ மேற்படிப்பு படிக்க முடியும்.
இது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில் …
NEET PG கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய ‘தகுதி’ மற்றும் நுழைவுத் தேர்வில் ‘தகுதி’ என்பது அர்த்தமற்றது என்பதை பாஜக ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் இதற்கு தகுதி தேவையில்லை. பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது.
NEET = 0. NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் இல்லை.
விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. NEET மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
MBBS படித்தும் 0 மார்க் எடுப்பவர்கள் மருத்துவம் பற்றியே ஒன்றும் தெரியாதவர்கள் என்பதையே குறிக்கிறது. ஆக மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாதவற்கலையே முதுகலை மருத்துவம் படிக்க அனுமதிப்பது எவ்வளவு பெரிய விளைவுகளை மருத்துவ துறையில் ஏற்படுத்தும் என்பதை நம்மால் ஊகித்து கூட பார்க்க முடியவில்லை. மேலும் பணம் மட்டும் இருந்தால் முற்றிலும் மருத்துவம் தெரியாமலேயே யாரும் முதுகலை பட்டம் பெற முடியும் என்பதை இந்த அரசின் முடிவு தெளிவுபடுத்துகிறது என்று நேட்டீசங்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.

