Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 26, 2026 6:29 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம்பெண், ஹோட்டல் அறையின் வாசலில், திடீரெனச் சரிந்து விழுந்து உயிரிழந்த பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இளம்பெண் மர்ம மரணத்தில் நடந்தது என்ன?.

திடீரென கீழே விழுந்த பெண்
திடீரென கீழே விழுந்த பெண்

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவைச் சேர்ந்த நீலேஷ் என்பவருக்கும், ஜான்சியைச் சேர்ந்த முஸ்கானுக்கும் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நீலேஷ், மத்தியப் பிரதேச கிராமின் வங்கியில் சொசைட்டி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் ரயில்வே பணிக்கான தேர்வுக்குத் தயாராவதற்காக இளம்பெண் முஸ்கான் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அக்டோபர் 28-ஆம் தேதி தேர்வு நடைபெறவிருந்த நிலையில், அக்டோபர் 23-ஆம் தேதி இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற நீலேஷ், மறுநாள் மனைவி முஸ்கானைத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் ஜான்சியில் உள்ள ரிஷப் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், அக்டோபர் 25-ஆம் தேதி காலை ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்காக அறைக்குச் சென்றபோது, இளம்பெண் முஸ்கான் திடீரெனச் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 47 விநாடிகள் ஓடக்கூடிய சிசிடிவி காட்சியில், கணவர் நீலேஷ் மற்றும் ஹோட்டல் ஊழியர் ஒருவருடன் முஸ்கான் அறையை நோக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அறையின் வாசலை அடைந்த சில நொடிகளில் அவர் திடீரெனப் பின்னால் சரிந்து விழுகிறார். அதன்பிறகு, நீலேஷ் அவரைத் தூக்கிச் செல்வதும் காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மாயமான 7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு… உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.

முஸ்கானை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய தந்தை, மருமகன் நீலேஷ் மீது கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகள் திருமணத்துக்குப் பிறகு மருமகன் நீலேஷுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது தெரியவந்ததாகவும், அவரது முதல் மனைவி இந்தூரில் வசிப்பதாகவும் முஸ்கானின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் காரணமாகத் தம்பதியிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் மகளின் தலையில் காயம் இருந்ததாகக் கூறிய தந்தை, அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நீலேஷை போலீசார் விசாரணைக்காகத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். முஸ்கான் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணின் கணவர் கூறுவதுபோல் இது திடீர் மயக்கத்தால் ஏற்பட்ட மரணமா? பெண்ணின் தந்தை குற்றம்சாட்டுவதுபோல் தாக்குதல் ஏதேனும் நடந்ததா?. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைகளுக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? என தொடர் விசாரணை நீடிக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

Next Post

”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

'''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' - அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In