Last Updated:
ஹைதராபாத் மத்திய சிறையில் தனியாகப் பாலின சமத்துவ சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் மத்திய சிறையில் தனியாகப் பாலின சமத்துவ சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் நலன் தொடர்பான வழிகாட்டுதல்களை ஆய்வு செய்வதற்காக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஹைதராபாத் மத்திய சிறையில் கள ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாறுபட்ட பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்களின் சுயமரியாதையையும், முறையான தங்குமிட வசதிகளையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் மத்திய சிறையில் தனியாகப் பாலின சமத்துவத்துடன் கூடிய சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு இச் சிறை அறை அமைக்கப்பட்டுள்ளதாக, ஹைதராபாத் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறையில் தங்க வைக்கப்படும் நபர்கள் தங்களின் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிவதற்கும் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

