Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெட்கம் அடைகிறோம்; துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் திருமணமா?- கி. வீரமணி| ki veeramani about duraimurugan family marriage function controversy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2026
in அரசியல் செய்திகள்
0
வெட்கம் அடைகிறோம்; துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் திருமணமா?- கி. வீரமணி| ki veeramani about duraimurugan family marriage function controversy
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?

1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.

இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!

இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.

🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?

புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?

அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?

நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?

தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.

புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!



.

Previous Post

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!’ – அமைச்சர் பேச்சால் சர்ச்சை! | Students With Improper Haircuts Should Be Shaved Bald, Says Minister Jagadeeswari

Next Post

DMK: மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் ஸ்டாலின்… டென்ஷனில் உதய்… பரபரக்கும் அறிவாலயம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக வெற்றி; திமுகவின் அமைதியான முன்னேற்றம்? இடைத்தேர்தல் சொல்லும் 3 விஷயங்கள்|TVK Won Both Seats, but DMK Has 3 Reasons to Take Notice

DMK: மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் ஸ்டாலின்... டென்ஷனில் உதய்... பரபரக்கும் அறிவாலயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In