Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

விருதுநகர்: பேருந்தினுள் கொட்டிய மழைநீர்; பயணச்சீட்டு வாங்க மறுத்து பயணிகள் வாக்குவாதம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in தமிழ்நாடு செய்திகள்
0
விருதுநகர்: பேருந்தினுள் கொட்டிய மழைநீர்; பயணச்சீட்டு வாங்க மறுத்து பயணிகள் வாக்குவாதம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் மாவட்டத்தில், நேற்று மாலை லேசான மழை பெய்தது. அந்தச் சமயத்தில், அருப்புக்கோட்டை பணிமனை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் `TN 67 N 0709′ என்ற எண்கொண்ட அரசுப் பேருந்து விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் மேற்கூரையிலிருந்த விரிசல் காரணமாக மழைநீர் பேருந்தினுள் பல்வேறு இடங்களிலும் ஒழுகிக் கொட்டியது. இதனால் அசௌகரியமாக உணர்ந்த பயணிகள், அவரவர் தங்களின் இருக்கையைவிட்டு எழுந்து தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.

பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்

அப்போது, அரசுப் பேருந்தின்‌ அவலநிலை குறித்து விமர்சித்த பயணிகள் சிலர் பயணச்சீட்டு வாங்க மறுத்து, நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் பயணச்சீட்டு வாங்கமறுத்ததால் ஆத்திரமடைந்த நடத்துனர், கொட்டும் மழையில் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திட சிக்னல் கொடுத்தார்.

இதனால் சில நிமிடங்கள் சாலை ஓரமாகப் பேருந்து நின்றது. பின்னர், சமாதானத்துக்கு இறங்கிவந்த பயணிகள், காசுகொடுத்து பயணச்சீட்டு வாங்கவும், பேருந்து அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது.

மழைநீர்

பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக பயணிகள், பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அரசுப் பேருந்தின் நிலை குறித்துப் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

.

Previous Post

“ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்துக்காக காத்திருக்கிறேன்” – ஜி.வி.பிரகாஷ்

Next Post

Sarathbabu: `கடவுளே அப்பாவைக் காப்பாத்துன்னு வேண்டினேன்' – நெகிழும் நம்பியார் பேரன் தீபக்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sarathbabu: `கடவுளே அப்பாவைக் காப்பாத்துன்னு வேண்டினேன்' – நெகிழும் நம்பியார் பேரன் தீபக்

Sarathbabu: `கடவுளே அப்பாவைக் காப்பாத்துன்னு வேண்டினேன்' - நெகிழும் நம்பியார் பேரன் தீபக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In