Tuesday, November 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விஜய்க்கு முதல் வரிசை, சிவகுமாருக்கு இரண்டாம் வரிசை ஏன்? | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2026
in அரசியல் செய்திகள்
0
விஜய்க்கு முதல் வரிசை, சிவகுமாருக்கு இரண்டாம் வரிசை ஏன்? | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 17, 2026 10:43 AM IST

டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘belonging a journey of love’ நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உட்பட இந்தியா கூட்டணி கட்சியின் முதலமைச்சர்களும், காங்கிரஸ் முதலமைச்சர்களும், பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த விழாவை தொடர்ந்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோருடன் முதலமைச்சர் விஜய் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய்க்கு முதல் வரிசையும் காங்கிரஸ் முதலமைச்சர்களான டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி மற்றும் வி.டி.சதீசன் ஆகியோருக்கு இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்தனர். விஜய் மற்றும் அகிலேஷ் யாதவ் முதல் வரிசையில் அமர்ந்திருக்க, ரேவந்த் ரெட்டி மற்றும் பிற காங்கிரஸ் முதலமைச்சர்கள் இரண்டாவது வரிசையில் அமர்ந்தது இருந்தது விமர்சனங்களை எழுப்பியது.

ஆனால், ரேவந்த் ரெட்டி மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் என்றும், விஜய் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பவர்கள் என்றும் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அல்லாத தலைவர்களுக்கு விருந்தோம்பலின் இயல்பாக அவர்களுக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரியங்கா காந்தியும் இரண்டாவது வரிசையில் தான் அமர்ந்திருந்தார். இது மாற்று கட்சியனருக்கு காங்கிரஸ் அளிக்கும் விருந்தோம்பல் தானே தவிர வேறு எந்தவிதமான அரசியல் சார்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, முற்றிலும் அறிமுகமில்லாத நாட்டில் அங்கீகாரத்தை பெற மேற்கொண்ட போராட்டத்தை பிரதிபலிக்கவே Belonging என்ற பெயர் சேர்த்தாக தெரிவித்தார். தனது கணவர் ராஜீவ் மற்றும் சஞ்சய் காந்தியிடம் கண்டிப்பு காட்டிய இந்திரா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா பிறந்த பின்னர் மென்மையானவராக மாறியதாக தெரிவித்தார்.



.

Previous Post

"அமெரிக்காவிற்கும், ISIS பயங்கரவாத அமைப்புக்கும் என்ன பெரிய வித்தியாசம்?" – மார்கோவிடம் ஈரான் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In