Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ம.பி., புலிகள் சரணாலய அதிகாரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு; 2.5 கிலோ தங்கம் உட்பட ரூ. 7.5 கோடி பறிமுதல் | Raids on Madhya Pradesh tiger reserve official’s home and office: Assets worth ₹7.5 crore seized

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2026
in அரசியல் செய்திகள்
0
ம.பி., புலிகள் சரணாலய அதிகாரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு; 2.5 கிலோ தங்கம் உட்பட ரூ. 7.5 கோடி பறிமுதல் | Raids on Madhya Pradesh tiger reserve official’s home and office: Assets worth ₹7.5 crore seized
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்தியப் பிரதேசத்தில் சஞ்சீவ் குமார் சர்மா என்பவர் பச்மர்கியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக மாநில லோகாயுக்தா அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் சர்மா, தனது மனைவி மற்றும் வேறு சிலருடன் இணைந்து, தனது சட்டத்துக்குப் புறம்பாக வருமானத்தை விட 228 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புலிகள் காப்பக அதிகாரி அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோர்ட்டில் உத்தரவு பெற்று லோகாயுக்தா அதிகாரிகள் சர்மாவுக்குச் சொந்தமான மற்றும் அவருக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் சோதனை நடத்தினர். லோக்யுக்தாவின் தனித்தனி குழுக்கள், பச்மார்பியில் உள்ள அவரது அரசு இல்லம் மற்றும் அலுவலகத்திலும், சிந்த்வாராவில் உள்ள அவரது தனியார் இல்லத்திலும் சோதனை நடத்தின.

போபால் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சோதனையில் ரூ.26,36,800 ரொக்கம் இருந்தது. மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2.528 கிலோ தங்கமும், ரூ.2.94 லட்சம் மதிப்புள்ள 1.656 கிலோ வெள்ளியும் சிக்கியது.

அதோடு ஸ்கார்பியோ, மஹிந்திரா கேயூவி, ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.31.2 லட்சம். மேலும் 50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் அந்த வளாகத்தில் சிக்கியது.

சர்மாவுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகளின் விவரங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் ஒன்று ரூ.2 கோடி மதிப்புள்ள ஈகோடெல் ரிசார்ட் ஆகும். மற்றொன்று ரூபாய் 1 கோடி மதிப்புள்ள செரினிட்டி தி வில்லா ஆகும். நிலப் பரிவர்த்தனைகள் தொடர்பான 28 ஆவணங்களை இந்தக் குழு கண்டெடுத்துள்ளது.

ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டின் மதிப்பு இன்னும் முறையாகக் கணக்கிடப்படவில்லை என்பதால், மொத்த மதிப்பு அதிகரிக்கக்கூடும். இதுவரை கண்டறியப்பட்ட சொத்துகளின் ஆரம்ப மதிப்பு சுமார் 7.6 கோடி ரூபாய் என்று லோகாயுக்தா மதிப்பிட்டுள்ளது. இது, சர்மாவின் வருமான ஆதாரங்களை விட சுமார் 560 சதவீதம் அதிகம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நில ஆவணங்களை ஆய்வு செய்த பிறகும், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டின் மதிப்பு முறையாகக் கணக்கிடப்பட்ட பிறகும், முழுமையான விவரங்கள் தெரியவரும்.



.

Previous Post

மேகதாது அணை விவகாரம்: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்|Mekedatu Row: EPS Has a Message for CM Vijay Ahead of Delhi Visit

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In