Last Updated:
மேகதாது அணை மூலம் 67.16 TMC தண்ணீர் கிடைக்கும் எனவும், அதனை குடிநீர், மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கு பயன்படுத்த இருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்துள்ளது
மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கடந்த மாதம் 13ஆம் தேதியே மத்திய அரசிடம் தாக்கல் செய்துவிட்டதாக கர்நாடக அமைச்சர் சாளுவராயசுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சாளுவராயசுவாமி, மேகதாது அணை திட்டத்துக்கு உடனடி ஒப்புதல் தர வலியுறுத்தினார். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், மேகதாது அணை திட்டத்தின் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கடந்த மாதம் 13ஆம் தேதியே தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கர்நாடகா தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, கடந்த முறை 9 ஆயிரம் கோடியாக இருந்த அணையின் திட்ட மதிப்பீடு தற்போது 16 ஆயிரத்து 745 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை மூலம் 67.16 TMC தண்ணீர் கிடைக்கும் எனவும், அதனை குடிநீர், மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கு பயன்படுத்த இருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்துள்ளது. மேலும், இந்த நீரை பாசன வசதிக்காக பயன்படுத்த மாட்டோம் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

