Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் – நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2026
in அரசியல் செய்திகள்
0
மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் – நாட்டைவிட்டு வெளியேற  உத்தரவு; பின்னணி என்ன?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான் கானும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இம்ரான் கானுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளிநாட்டு இந்தியர் அடையாள அட்டையும் இருக்கிறது. அவர் முழுமையான இந்தியர் என்ற அடையாளம் கிடையாது. ஆமீர் கானின் உறவினரான இம்ரான் கான் மும்பை போராட்டத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் காக்ரோச் ஜனதா போராட்டத்தில் பங்கேற்றதற்காக வரும் 28ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மும்பை போலீஸார் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில்,”இந்தியக் குடிமகனாக இல்லாத நிலையிலும் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இமிகிரேசன் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025′-ன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 7 வது பிரிவு இந்தியாவில் வெளிநாட்டவர்களின் வருகை, வெளியேற்றம், இருப்பு அல்லது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, வரையறுக்கவோ அல்லது தடைசெய்யவோ தேவையான உத்தரவுகளையோ, வழிகாட்டுதல்களையோ அல்லது அறிவுறுத்தல்களையோ பிறப்பிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

முன்னதாக மும்பை பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா மும்பை போலீஸாரிடம் கொடுத்திருந்த புகாரில் இம்ரான் கான் சட்டவிரோதமான அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர் சட்ட விதிமுறைகளையும் விசா நிபந்தனைகளையும் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தார்.

மும்பை போராட்டத்தில் பங்கேற்றது குறித்து இம்ரான் கான் அளித்த பேட்டியில், தான் மும்பையின் ஒரு குடிமகனாகவே இந்த இடத்திற்கு வந்ததாகவும், எந்தவொரு குறிப்பிட்ட கோரிக்கையுடனும் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,” எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு குடிமகனாக, இந்த நகரத்தில் வசிக்கும் ஒரு நபராகத்தான் இங்கே வந்திருக்கிறேன். மக்களின் நடமாட்ட சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது? மக்களின் குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன? இதைப் புரிந்துகொள்ளவே நான் இங்கே வந்திருக்கிறேன்,” என்று கூறினார்.



.

Previous Post

ராம்லீலா நிகழ்ச்சி; 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்க முடிவு! – அரசியல் பின்னணியா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி. | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி. | India News (இந்தியா செய்திகள்)

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In