Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.!”- வீடியோ வெளியிட்ட அயலக மாணவர்; ஸ்டாலின் கண்டனம் | a student from abroad has posted stalin supported him
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்
முதல்வர் விஜய் – புதிய தலைமைச் செயலகம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். கண்டனங்கள் வலுத்த நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகம் விவகாரத்தில் முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!’- கொதிக்கும் மீனவர்கள்

அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?

முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!

புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்
புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.

மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.



.

Previous Post

இந்திய ஊடகத்துறையை உலுக்கிய பாயல் மேத்தாவின் மறைவு! பிரதமர் முதல் எதிர்க்கட்சிகள் வரை அஞ்சலி.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: கூட்ட நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்வது எப்படி? IRCTC பேக்கேஜ் vs சொந்த பயணம்! | IRCTC Tirupati Darshan Packages 2026: How To Beat Brahmotsavam Crowds And Book Easy Tickets Online

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம்: கூட்ட நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்வது எப்படி? IRCTC பேக்கேஜ் vs சொந்த பயணம்! | IRCTC Tirupati Darshan Packages 2026: How To Beat Brahmotsavam Crowds And Book Easy Tickets Online

திருப்பதி பிரம்மோற்சவம்: கூட்ட நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்வது எப்படி? IRCTC பேக்கேஜ் vs சொந்த பயணம்! | IRCTC Tirupati Darshan Packages 2026: How To Beat Brahmotsavam Crowds And Book Easy Tickets Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In