Last Updated:
முதல்வர் விஜய் பெயரில் கடன் உதவி மோசடி: இந்தூரில் கும்பல் தேடல். தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து இந்தூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
முதலமைச்சர் விஜய் பெயரில் கடன் உதவி வழங்குவதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் மக்களை தொடர்பு கொள்ளும் மர்ம கும்பல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது அறக்கட்டளை மூலம் புதிதாக தொழில் தொடங்குவது உள்பட பல்வேறு பணிகளுக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளது.
இதை நம்பி பலரும் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க முன்வந்துள்ளனர். அப்படி முன் வந்தவர்களிடம் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பம், அதை செயல்படுத்த தேவையான கட்டணம் எனக் கூறி ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மர்ம கும்பல் வசூலித்ததாக தெரிகிறது.
முதலமைச்சர் விஜயின் அறக்கட்டளை மூலம் தங்களுக்கு நிதி உதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தாமதமாக ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் இந்தூர் சைபர் கிரைம் போலீசார் தலைமறைவான கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து முதலமைச்சர் விஜய் பெயரிலான போலி அறக்கட்டளை குறித்து இந்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

