Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார சுடுகாட்டில் மின்சாரம் இல்லாததால் இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உறவினர்கள் பேசிய வீடியோ நேற்று வெளியானது. இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், “தவறான தகவல் மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.” என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக ஆட்சியில் இறந்தவர்களைத் தகனம் செய்ய மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வர வேண்டுமா?

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

உண்மையை மறைத்து, தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் வெட்கக்கேடானது! திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன், மின்வாரியத்தின் அலட்சியத்தால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலில், தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்ததாக வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி மனதை உலுக்குகிறது.

மின்தடை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரியமும், சம்பந்தப்பட்ட அமைச்சரும், தாங்களே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்து இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்ததாகப் பொய்யான தகவலைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதைப் பாதிக்கப்பட்ட நபரே தனது காணொளி மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். மின்தடையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல், மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு எரிசக்தித் துறை அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மக்களின் துயரத்திலும் உண்மையை மறைத்து விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் அருவருக்கத்தக்கது. தவெக ஆட்சி அமைந்தது முதலே, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடங்கி, மின்கணக்கீட்டில் குளறுபடிகள், மறைமுக மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, குறிப்பாக, முதலமைச்சரின் தொகுதியிலேயே மின்வெட்டால் பொதுமக்கள் போராட்டம், மின் கொள்முதலில் தடுமாற்றம் என, தனது திறனற்ற நிர்வாகத்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான எரிசக்தித் துறையைப் படுகுழியில் தள்ளிவிட்டு, விளம்பரம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு வெறும் வாய்ச்சவடால் பேசி வரும் எரிசக்தித் துறை அமைச்சர் அவர்களிடம், சட்டத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளையும் ஒப்படைத்திருப்பது முதலமைச்சரின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.

முக்கியத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முதலமைச்சர், அவற்றையெல்லாம் கவனிக்காமல், துறை சார்ந்த பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றாத அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, எதுவுமே நடக்காததைப் போல வேடிக்கை பார்ப்பது, தனது பொறுப்பிலிருந்து நழுவி, நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணைபோவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அமைச்சர்களைத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் வைத்திருப்பதன் மூலம், முதலமைச்சர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எனவே, மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காத வெட்டிப் பேச்சுகளுடன் வலம் வரும் எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள், இனியாவது தனது துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, மின்தடையால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரை நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எரிசக்தித் துறையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நேரடிக் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?” – கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி… மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In