Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2026
in அரசியல் செய்திகள்
0
`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன” என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு. சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியிருக்கிறது தமிழ்நாடு. குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.

சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

க்ரைம்
க்ரைம்

திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெம் வீரமணி: `காவலில் வைத்து விசாரியுங்கள்..!’- போக்சோ வழக்கில் ஆஜர்படுத்திய போலீஸ்; கோர்ட் உத்தரவு!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.

வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா?

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?

காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?

குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. ‘Take – Action’ #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்.. உலக வெப்பநிலை உயர்வு குறித்து புபேந்தர் யாதவ் கவலை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக்குவோம்…” – பிரதமர் மோடி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக்குவோம்…” – பிரதமர் மோடி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

"இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக்குவோம்..." - பிரதமர் மோடி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In