Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞர்! ஆந்திரா பள்ளியில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞர்! ஆந்திரா பள்ளியில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 31, 2026 3:21 PM IST

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவியை மர அறுவை இயந்திரத்தால் தாக்கிய ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

News18
News18

10ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியை, பள்ளி வகுப்பறைக்குள்ளே புகுந்து, மரம் அறக்க பயன்படுத்தப்படும் அறுவை இயந்திரம் மூலம், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி ரத்த வெள்ளத்தில் சாய்த்த 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், அரசு உயர் நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இன்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டுவந்த நிலையில், திடீரென இளைஞர் ஒருவர், அந்தப் பள்ளியின் 10ஆம் வகுப்பறைக்குள் புகுந்துள்ளார். அவர் தனது கையில், மரம் அறுக்க பயன்படுத்தப்படும், அறுவை இயந்திரத்தை கொண்டு, வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் பயத்தில் அலறி சத்திமிட்டுக்கொண்டிருந்தபோது, சக மாணவி ஒருவர் அந்த நபரை தடுத்து, மாணவியை காக்க முற்பட்டுள்ளார். இதனால் அந்த மாணவிக்கும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயம் அடைந்த மாணவிகளை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

தொடர்ந்து காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்குவந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவியை தாக்கிய இளைஞர் தர்மவரம் ரயில் நிலையம் அருகே காவல்துறையிடம் பிடிபட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவரின் பெயர் ஹேமந்த் (25) என்பதும், அந்த மாணவியின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது. மேலும், மாணவியை ஒருதலையாக காதலித்துவந்ததாகவும், இது குறித்து மாணவியிடம் தெரிவித்தபோது, அதனை மறுத்ததாகவும், மேலும், தொடர்ந்து தொந்தரவு செய்தால் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன் என மாணவி எச்சரித்ததாகவும், இதனால் மாணவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்ததாக தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “ராப்தாடு பஞ்சாயத்து (ZP) உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறைக்குள்ளேயே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான சம்பவம், எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்குள் நமது சிறுமிகளைத் தாக்கும் இத்தகைய நபர்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை.

I am deeply shaken and enraged by the barbaric attack on a Class 10 student inside her classroom at Raptadu ZP High School. Attackers who target our young girls inside schools have no place in our society.


I am personally tracking her recovery and have directed the medical team to give her the highest priority care. I have ordered the police to hunt down the monster responsible and deliver the harshest legal punishment swiftly.

— N Chandrababu Naidu (@ncbn) October 31, 2026

அந்த மாணவியின் உடல்நிலை தேறி வருவதை நான் நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். அவருக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க மருத்துவக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இந்தச் செயலைச் செய்த அந்த அரக்கனைக் கண்டுபிடித்து, அவனுக்குச் சட்டப்படி மிகக் கடுமையான தண்டனையை விரைவாக வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

தங்கை மகளின் திருமணத்துக்கு குடும்ப இடத்தை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல’ – ஷர்மிளா வேதனை | ys-jagan-denies-sharmila-daughter-wedding-venue-property-dispute

Next Post

'டெல்லியின் மெசேஜ்' – இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! – திட்டம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'தீயசக்தி திமுகவுக்கும், துரோகி `மற்றும் பலருக்கும்' ஓட்டு போடாதீங்க' – தாராபுரத்தில் முதல்வர் விஜய்

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In