Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன்" – NVIDIA CEO; சீனாவின் உளவு சதியில் சிக்கினாரா? புது தகவல்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2026
in அரசியல் செய்திகள்
0
"மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன்" – NVIDIA CEO; சீனாவின் உளவு சதியில் சிக்கினாரா? புது தகவல்கள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த அக்டோபர் 29-ம் தேதி, தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜென்சன் ஹுவாங் சீனாவின் உளவுச்சதியில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனாவின் உளவுச்சதி என்பது பெண் உளவாளிகளை உலகின் முன்னணி நிறுவனங்களின் முக்கிய தலைவர்களிடம் நெருங்கிப் பழக வைத்து, அவர்களின் ரகசியங்களைப் பெறுவதாகும்.

Nvidia உலகின் முன்னணி சிப் நிறுவனம் ஆகும். இப்போது இந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரிதான் இந்த வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஒப்புக்கொண்டு ஜென்சன் ஹுவாங் தன்னுடைய குடும்பம் மற்றும் ஊழியர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 NVIDIA CEO
NVIDIA CEO
“வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்!” – சூர்யா ‘ஓபன்’ டாக்

ஜென்சன் ஹுவாங்கின் மெயில்

Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருக்கும் செய்தி…

“என் குடும்பத்தினருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன். நான் என் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டேன்.

எனது செயல்கள் அவரையும் நமது குழந்தைகளையும் பெரிதும் காயப்படுத்தியுள்ளன.

நான் செய்த காரியத்திற்கு எந்தக் காரணமும் சாக்காக முடியாது. நான் இதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

என் வாழ்நாள் முழுவதும், என் குடும்பத்தினர் எனக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கி வந்துள்ளனர். அவர்கள் என்னிடம் நேர்மையும் விசுவாசத்தையும் மட்டுமே எதிர்பார்க்கத் தகுதியானவர்கள்.

ஆனால், நான் அவர்களை ஏமாற்றி, நாங்கள் இணைந்து கட்டியெழுப்பிய வாழ்க்கையைச் சேதப்படுத்திவிட்டேன்.

நான் செய்த தவறுக்கும் அதனால் ஏற்பட்ட காயங்களுக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்.

இதன் விளைவாக வரும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்.

என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு: நான் உங்களை நேசிக்கிறேன். ஒரு மன்னிப்பால் நான் செய்த தவறைச் சரிசெய்துவிட முடியாது என்பது எனக்குத் தெரியும்.

 NVIDIA CEO ஜென்சன் ஹுவாங்
NVIDIA CEO ஜென்சன் ஹுவாங்
வாழ்க்கை ஒரு வட்டம்! 25,000-ஐ தாண்டிய Nifty; தள்ளாடும் அமெரிக்கா, ஆசிய சந்தைகள்: ஏ.ஐ சொல்லும் பாடம்

நமது குடும்பம் இந்த வடுவிலிருந்து மீண்டு வரும் என்றும், காலப்போக்கில் உங்கள் நம்பிக்கையை நான் மீண்டும் பெறுவேன் என்றும் நம்புகிறேன்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக என்னுடன் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் உட்பட என்விடியாவின் அனைத்து ஊழியர்களுக்கும், நமது நிர்வாகக் குழு, பங்காளிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்குதாரர்களுக்கு: நீங்கள் என்னை விடச் சிறந்த ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறத் தகுதியானவர்கள்.

என்விடியாவை வழிநடத்துவது என் வாழ்வின் மிகப்பெரும் பாக்கியம். உங்களுக்குச் சேவை செய்வதும் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதுமே எனது கடமை. அந்தக் கடமையில் நான் தவறிவிட்டேன்.

நான் என்விடியா மீது முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உழைப்பேன்.

செய்தி அறிக்கைகளில் எழுப்பப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புக் கவலைகள் குறித்து, என்விடியா ஒரு சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நான் இந்த விசாரணைக்கு முழு ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். நான் நமது நாட்டையும் நமது நிறுவனத்தையும் நேசிக்கிறேன். என்விடியாவைப் பாதுகாப்பதிலும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை ஆதரிப்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

ஒரு அமெரிக்கனாக இருப்பதில் நான் பெருமையும் நன்றியும் கொள்கிறேன்.

எனது தேர்வுகளுக்கு என் குடும்பத்தினர் பொறுப்பல்ல. நான் மட்டுமே பொறுப்பு. தயவுசெய்து அவர்களுக்குத் தனிப்பட்ட சுதந்திரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து என்விடியா நிறுவனம் தனிப்பட்ட விசாரணை ஒன்றை நடத்த உள்ளது.

ஆலிஸ் ஹுவாங் - ஜென்சன் ஹுவாங்
ஆலிஸ் ஹுவாங் – ஜென்சன் ஹுவாங்
“பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்” – செனட்டர் அப்துல் எல்-சையத்

யார் அந்த உளவாளி?

ஹுவாங் லே தான் ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு ஆலிஸ் ஹுவாங் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இவர் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட்’ என்ற தரவு மைய நிறுவனத்தின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறார். இவர் சீனர் ஆவார்.

தி நியூயார்க் டைம்ஸ் தகவலின்படி, மெகாஸ்பீட் நிறுவனம் என்விடியா சிப்களால் இயங்கும் கணினி உபகரணங்களை வாங்கி, சீனாவின் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தரவு மைய வசதிகளை வாடகைக்குக் கொடுக்கும் இடைத்தரகு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

முன்பு ஆலிஸ் ஹுவாங் மெகாஸ்பீட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார். அவரது பதவியும், மெகாஸ்பீட் நிறுவனம் என்விடியாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளும், என்விடியாவின் தலைமைச் செயலதிகாரியான ஜென்சன் ஹுவாங்குடன் அவருக்குத் தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தி கார்டியன் நாளிதழின் கூற்றுப்படி, என்விடியா சிப்களைச் சீனாவிற்குள் கடத்த அவர் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் ஏற்கெனவே சந்தேகித்திருந்தனர். இதன் காரணமாக அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி, பெய்ஜிங்கிற்கு மேம்படுத்தப்பட்ட ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு கடுமையான தடைகளை விதித்துள்ளது.

Nvidia (NVDA)
Nvidia (NVDA)
“மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை” – டி.கே.சிவக்குமார்

இந்தத் தடைகள் காரணமாகச் சீனா பெற முடியாத தொழில்நுட்பங்களை, மெகாஸ்பீட் நிறுவனம் மூலம் சீன வணிகங்கள் பெறுவதற்கு ஆலிஸ் ஹுவாங் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஜென்சன் ஹுவாங் மிக முக்கியமான செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராவார்.

ஏஐ அமைப்புகளின் வளர்ச்சிக்கு என்விடியாவின் அதிநவீன சிப்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ள என்விடியா ஒரு முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.

தொழில்நுட்பம், உற்பத்தி, வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு விஷயங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான தொடர்பாளர் ஜென்சன் ஹுவாங்.

தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, என்விடியா சிஇஓவுடனான தொடர்புகள் மூலம் ஆலிஸ் ஹுவாங் என்விடியாவின் வர்த்தகத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இத்தகைய உரையாடல்கள் சீனாவிற்குச் சிப் ஏற்றுமதி தொடர்பிலான ட்ரம்பின் யோசனைகளைப் பெய்ஜிங் அறிந்துகொள்ள வழிவகுத்திருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.



.

Previous Post

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்: அப்துல் எல்-சையத் வலியுறுத்தல்|’Israel Is a Good Start’: US Senator on Ending Foreign Aid

Next Post

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்… அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்… அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்... அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In