Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போலீஸ் கிட்ட இருந்து `ஆஜராகச் சொல்லி' நோட்டீஸ் வந்தால், பயப்படாதீங்க.! | சட்டம் சொல்வது என்ன? – 5

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
போலீஸ் கிட்ட இருந்து `ஆஜராகச் சொல்லி' நோட்டீஸ் வந்தால், பயப்படாதீங்க.! | சட்டம் சொல்வது என்ன? – 5
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து உங்களை விசாரிக்க வரச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு…”

இந்த ஒரு வார்த்தையே பலரையும் பதற வைக்கும். “என்னை அரெஸ்ட் பண்ணப் போறாங்களா?”, “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமா?”, “வக்கீலைக் கூட்டிட்டுப் போகணுமா?” எனப் பல கேள்விகள் ஓட ஆரம்பிக்கும்.

முதலில் ஒரு விஷயம் தெளிவு: போலீஸ் விசாரணைக்காக வரச் சொல்லி நோட்டீஸ் வந்ததாலே நீங்கள் அரெஸ்ட் செய்யப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை.

இது ‘சம்மன்’ஆ… ‘நோட்டீஸ்’ஆ?

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 35(3) முக்கியமானது. ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக அரெஸ்ட் உடனடியாக தேவையில்லை என்று போலீஸ் கருதும் சூழலில், அந்த நபர் குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. குறிப்பாக, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களில், உடனடியாகக் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ அவசியம் இல்லாதபோது, நோட்டீஸ் வழங்குவதே பொதுவான நடைமுறையாக இருக்க வேண்டும் .

இங்கே ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். நீதிமன்றம் வழங்கும் ‘சம்மன்’ வேறு; போலீஸ் வழங்கும் பிரிவு 35(3) நோட்டீஸ் வேறு. இரண்டையும் ஒரே மாதிரி நினைக்கக் கூடாது.

இந்த நோட்டீஸை அலட்சியப்படுத்தக் கூடாது. பிரிவு 35(4) படி, நோட்டீஸில் சொல்லப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றுவது அந்த நபரின் கடமை.

“வர மாட்டேன்!” என்று விட்டுடலாமா?

அப்படி செய்யக்கூடாது. நோட்டீஸை முறையாகப் பின்பற்றி விசாரணைக்கு ஒத்துழைக்கும் நபரை, அதே குற்றம் தொடர்பாக பொதுவாகக் கைது செய்யக்கூடாது. இருப்பினும், கைது அவசியம் என்று காவல்துறை கருதினால், அதற்கான காரணங்களைப் பதிவு செய்வதுடன், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கைது நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்று பிரிவு 35(5) சொல்கிறது.

சட்டம் சொல்வது என்ன

ஆனால், நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறினால், BNSS பிரிவு 35(6)-ன் கீழ், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைது செய்யப்படலாம். இருப்பினும், நோட்டீஸைப் பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்தால் தானாகவே கைது செய்யப்படுவார் என்று அர்த்தமில்லை. நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆஜராக முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால், அதை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்குத் தெரிவித்து, மாற்றுத் தேதி கோருவது நல்லது.

அதனால், நோட்டீஸ் வந்தால் தேதி, நேரம், போலீஸ் ஸ்டேஷன், வழக்கு/FIR விவரங்கள் போன்றவற்றை முதலில் கவனமாகப் பாருங்கள்.

“நான் குற்றவாளியே இல்லையே… என்னை ஏன் அழைக்கிறாங்க?”

குற்றத்தில் தொடர்புடையவர் மட்டுமல்ல; சம்பவத்தைப் பற்றி தெரிந்த சாட்சிகளையும் போலீஸ் விசாரணைக்காக அழைக்கலாம்.

BNSS-ன் பிரிவு 179-ன் கீழ், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் பற்றி தெரிந்திருக்கக்கூடிய ஒருவரை சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அதிகார வரம்பிற்குள், எழுத்துப்பூர்வ உத்தரவு மூலம் விசாரணைக்கு ஆஜராகச் சொல்ல போலீசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இந்தப் பிரிவில் சிலருக்குச் சிறப்புப் பாதுகாப்பும் உள்ளது.

பெண்கள், 15 வயதுக்குக் குறைவான ஆண்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மனநலம் அல்லது உடல்நலக் குறைபாடுடையவர்கள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை, அவர்கள் வசிக்கும் இடத்தைத் தவிர வேறு இடத்தில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், அவர்கள் விருப்பத்துடன் காவல் நிலையத்திற்கு வரச் சம்மதித்தால் காவல் நிலையத்தில் விசாரிக்கலாம்.

அதனால், உங்களை அழைத்திருக்கிறார்கள் என்றாலே நீங்கள் குற்றவாளி என்று அர்த்தமில்லை.

வக்கீலைக் கூட்டிக்கிட்டு போகலாமா?

உங்கள் நிலைமைக்கு ஏற்ப சட்ட ஆலோசனை பெறுவது நல்லது. நோட்டீஸ் பெற்றவர் விசாரணைக்குச் செல்வதற்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறலாம். வழக்கறிஞரை உடன் அழைத்துச் செல்லவும் கோரலாம். ஆனால், விசாரணை முழுவதும் வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் என்ற பொதுவான உரிமை இதனால் ஏற்படுவதில்லை.

சட்டம் சொல்வது என்ன

விசாரணையில் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமா?

BNSS பிரிவு 180(2)-ன் படி, விசாரணையில் கேட்கப்படும் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு உண்மையாகப் பதிலளிக்க வேண்டும். ஆனால், தன்னையே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கக்கூடிய அல்லது குற்றவியல் தண்டனைக்கு ஆளாக்கக்கூடிய பதில்களை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இது விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என்று அர்த்தமல்ல; சட்டம் வழங்கும் பாதுகாப்பை அறிந்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நோட்டீஸ் வேறு… அரெஸ்ட் வேறு!

நோட்டீஸ் பெற்றவர்க்கு அரெஸ்ட் செய்யப்படுபவர்க்கும் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

BNSS-ன் பிரிவு 38 என்பது அரெஸ்ட் செய்யப்பட்ட நபருக்கு, போலீஸ் விசாரணையின்போது அவர் விரும்பும் வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால், விசாரணை முழுவதும் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என்று அந்தப் பிரிவு சொல்லவில்லை.

நோட்டீஸ் வந்தது மட்டும் அரெஸ்ட் என்று அர்த்தமில்லை. அரெஸ்ட் செய்வதற்கான சூழ்நிலைகள் BNSS-ன் பிரிவு 35-ல் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணைக்காக ஆஜராகச் சொல்வதும், ஒருவரைக் காவலில் எடுப்பதும் இரண்டு வெவ்வேறு சட்ட நடவடிக்கைகள். நோட்டீஸுக்கு இணங்க ஆஜராகும் நபரை, சட்டப்பூர்வக் காரணமின்றி தானாகவே கைது செய்ய முடியாது.

அரெஸ்ட் செய்யப்பட்டால், அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 22(1) கீழ் அரெஸ்ட் செய்யப்பட்ட காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; சட்ட ஆலோசனையைப் பெறும் உரிமையும் உள்ளது. மேலும் சரத்து 22(2) படி, பொதுவாக 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும்.

சட்டம் சொல்வது என்ன

நோட்டீஸ் வந்தால் இந்த 3 விஷயங்களை மறக்காதீங்க!

1. நோட்டீஸில் உள்ள தேதி, நேரம், இடத்தை சரிபார்க்கவும்.

2. வழக்கு அல்லது FIR தொடர்பான விவரங்களை கவனமாகப் படிக்கவும்.

3. புரியாத சட்ட விஷயம் இருந்தால், தேவையான சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும். நோட்டீஸின் நகலையும், விசாரணைக்கு ஆஜரானதற்கான பதிவுகள் அல்லது ஆதாரங்களையும் பாதுகாத்து வைக்கவும்.

அதனால்… போலீஸ் நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில் அதை லேசாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள். நோட்டீஸைப் படித்து, அது எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, உரிய தேதியில் ஆஜராகி, சட்டப்படி ஒத்துழைப்பதே சரியான வழி. நோட்டீஸ் வந்தது மட்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாகவோ, குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவோ அர்த்தமில்லை.!

உங்களுக்கு லீகல் நோட்டீஸ் வந்திருக்கா? பயப்பட வேண்டாம்! – சட்டம் சொல்வது என்ன? – 4



.

Previous Post

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Next Post

“இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

“இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In