Last Updated:
பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள், உலகளாவிய வர்த்தகத் தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
பெண் தொழில்முனைவோர் தினம் 2026-ஐ முன்னிட்டு, மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், இந்திய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்புடன் இணைந்து நேற்று முன்தினம் (2026 நவம்பர் 19) புதுதில்லியில் சிறப்பு மாநாட்டை நடத்தியது.
இதில் மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமை விருந்தினராகவும், இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.
நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சுமார் 38 சதவீதம் பெண்களால் நடத்தப்படுவதாக அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்தார். பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசின் திட்டங்கள் உதவுவதாகவும், 2026-ம் ஆண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சிச் சட்டத் திருத்தம், சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் நிதிச் சுதந்திரம் அவசியம் என்று இதில் பேசிய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் பெண்களுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள், உலகளாவிய வர்த்தகத் தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

