Last Updated:
பெட்ரோலில் எத்தனால் கலப்பு விவரம் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், உரிய நிவாரணம் கோரி உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அனுமதி அளித்தது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பெட்ரோலில் கலந்துள்ள எத்தனால் குறித்த விவரங்களை வெளியிட கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நரேந்திர குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஒரே சீரான அளவில் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது என்ற விவரங்களையும் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு எத்தனால் கலந்த பெட்ரோல் பொருத்தமானவை என்பதை அறிந்து கொள்ளும் வகையில், தரவுகளை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த மனுவை போலி மனு என கூறி மத்திய அரசு வழக்கறிஞர், கடந்த ஆண்டும் இதே போன்றதொரு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டினார்.

