Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புழலில் அன்பில்! – முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2026
in அரசியல் செய்திகள்
0
புழலில் அன்பில்! – முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி!   நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதான அன்பிலை அழைத்துக் கொண்டு காவல்துறை இரவு 10 மணிக்கு மேல் நீதிமன்றத்தை நாட, நள்ளிரவில் நீதிபதி முன் திமுக தரப்பும் அரசுத் தரப்பும் காரசாரமாக விவாதம் செய்திருக்கிறது. நீதிமன்றத்தில் நடந்த வாதம் இங்கே.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகியிருந்தார். அவர் முன்வைத்த வாதமாவது, ‘முன் ஜாமீன் தள்ளுபடி என்கிற உத்தரவு கைக்கு வந்து சேரும் முன்பாக காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்திருக்கின்றனர்.

அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார். நான் வேறு வழக்குக்காக வீடியோ மூலம் ஆஜராகியிருந்தேன். இது குறித்து நீதிமன்றம் நிச்சயமாக கேள்வி எழுப்பியே ஆக வேண்டும். மேலும், முன்னாள் அமைச்சரை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமெனில் ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். அதையும் இவர்கள் செய்யவில்லை. மேலும், இந்த விவகாரத்தை ஒரு அமைச்சரால் எப்படி செய்ய முடியும்? இது பல்வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? காவல்துறை விசாரணை என அழைக்கும் போதெல்லாம் அன்பில் ஒத்துழைப்பே கொடுத்திருக்கிறார். எனவே இந்த வழக்கில் கைது அவசியமில்லை’ என வாதாடினார்.

View this post on Instagram

பதில் வாதத்தை முன்வைத்த அரசு தரப்பு, ‘வழக்கறிஞரின் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்தே அன்பிலை அழைத்து வந்தோம். இந்த வழக்கில் ஆன்லைன் பரிவர்த்தனையில் எல்லாம் மோசடி நடந்திருக்கிறது. மொத்தமாக 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அதில் அன்பில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறோம். அன்பில் வெளியில் இருந்தால் சாட்சிகளை கலைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என வாதிட்டனர்.

இரவு 10 மணிக்கு அன்பில் நீதிமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மாற்றி மாற்றி காரசாரமாக வாதிட்டனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சத்யமூர்த்தி அன்பிலுக்கு நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என தீர்ப்பை கூறினார். சரியாக நள்ளிரவு 12:45 மணிக்கு அன்பிலை கோர்ட்டிலிருந்து புழல் சிறைக்கு ஏற்றிக்கொண்டு போலீஸ் வேன் சீறிப்பாய்ந்தது.





.

Previous Post

ரூ.100 கோடி மோசடி வழக்கு ; திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி| ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh’s Anticipatory Bail Plea Dismissed

Next Post

மோடி குறித்து கார்கே பேச்சு: பாஜக–காங்கிரஸ் மோதல்|Kharge’s “Modi’s Father” Remark Triggers Political Storm

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடி குறித்து கார்கே பேச்சு: பாஜக–காங்கிரஸ் மோதல்|Kharge’s “Modi’s Father” Remark Triggers Political Storm

மோடி குறித்து கார்கே பேச்சு: பாஜக–காங்கிரஸ் மோதல்|Kharge’s “Modi’s Father” Remark Triggers Political Storm

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In