Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! – தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2026
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! – தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதையடுத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் குவிந்த மீனவ கிராமத்தினர், சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து எம்.எல்.ஏ நேருவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, “எம்.எல்.ஏ நேரு அவர்கள் சுமார் நூறு குண்டர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவதாகக் கூறி, சட்டப்பேரவைக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை முற்றுகையிட்டு தவறான வார்த்தைகளைக் கூறினர்.

அத்துடன் அவரை அச்சுறுத்தும் வகையில், `நான்கு நாள்களில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’ என்ற வார்த்தையைக் கூறியிருக்கிறார் எம்.எல்.ஏ நேரு. அவர் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஆதரவாக குவிந்த மீனவ கிராம மக்கள்

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஆதரவாக குவிந்த மீனவ கிராம மக்கள்

அந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ நேரு பேசியிருக்க வேண்டியது காவல்துறையிடமும், அதன் அமைச்சரான உள்துறை அமைச்சரிடமும்தான். அப்படி இருக்கும்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை நான்கு நாள்களில் தூக்கிவிடுவேன் என்று எம்.எல்.ஏ நேரு பேசியதற்கு என்ன அர்த்தம் ?

அதனால் அவர் மீது உடனே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றனர்.

அதையடுத்து, சட்டப்பேரவையின் மார்ஷல் பழனிசாமி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தயாளன் ஆகிய இருவரும் பெரியகடை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து எம்.எல்.ஏ நேருவிடம் கேட்டபோது, “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கேட்டதற்காக காவல்துறை என் மீதும் என்னுடைய ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அங்கு யாரையும் எங்கள் ஆதரவாளர்கள் தாக்கவும் இல்லை, அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கவும் இல்லை. ஆனால் பொய்யாக 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். மக்களுக்காக இன்னும் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் எதிர்கொள்வேன்” என்றார்.



.

Previous Post

“ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்…” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு

Next Post

காந்தி ஜெயந்தி ‘டிரை டே’: ஈசிஆர், புதுச்சேரி டிரிப் பிளான் பண்றீங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! | Gandhi Jayanti 2026 Dry Day: Travel Tips For Tamil Nadu, Puducherry And Kerala

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காந்தி ஜெயந்தி ‘டிரை டே’: ஈசிஆர், புதுச்சேரி டிரிப் பிளான் பண்றீங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! | Gandhi Jayanti 2026 Dry Day: Travel Tips For Tamil Nadu, Puducherry And Kerala

காந்தி ஜெயந்தி 'டிரை டே': ஈசிஆர், புதுச்சேரி டிரிப் பிளான் பண்றீங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! | Gandhi Jayanti 2026 Dry Day: Travel Tips For Tamil Nadu, Puducherry And Kerala

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In