Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது”/Anbumani demand to the New Secretariat iplan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
“பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது”/Anbumani demand to the New Secretariat iplan
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் கூட, இன்றைய நிலையில் அது போதிய இட வசதி இல்லாததாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் தான் இருந்திருக்கும். அதேபோல், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 26.36 ஏக்கரும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு போதுமானதாக இருக்காது என்பது என்பது தான் நகரமைப்பு வல்லுனர்களின் கருத்து ஆகும். அவ்வாறு இருக்கும் போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கும், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்டதை விட பாதியளவும் மட்டுமே கொண்ட பல்லவன் இல்லத்தில் எவ்வாறு நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகம் கட்ட முடியும்?

மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, பல்லவன் இல்லத்தின் தெற்கில் அண்ணா சாலை, கிழக்கில் பல்லவன் சாலை, மேற்கில் கூவம் ஆறு, வடக்கில் புனித மேரி போர்வீரர்கள் கல்லறை மற்றும் பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை இருப்பதால் எதிர்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் கூட அது சாத்தியமாகாது.

பாமக மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட தேவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது என்பதும், அந்தத் தேவையை நிறைவேற்ற புதியத் தலைமைச் செயலகம் விரைவாக கட்டப்பட வேண்டும் என்பதும் தான். அந்த வகையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அது தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, பரந்து விரிந்த நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

சட்டப்பேரவையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் மட்டுமின்றி, பல்லவன் இல்லமும் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. அதனால் தான் சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அதை விடுத்து முதலில் பட்டினப்பாக்கம், அதற்கு எதிர்ப்பு எழுந்த பின் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலத்தை அமைக்க திட்டமிடுவதன் மூலம் தமிழ்நாடு அரசு மீண்டும், மீண்டும் தவறு செய்து வருகிறது.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு திறந்த மனதுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும். அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே யோசனை தெரிவித்தவாறு, சென்னைக்கு வெளியில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரூபியோ சொன்ன முக்கிய தகவல்|India-US Trade Deal Almost Done? What Rubio’s Visit Signals

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ சந்திப்பு: இந்தியா மீதான அமெரிக்க வரி என்ன ஆகும்? – மார்கோ ரூபியோ கருத்து | Jaishankar Marco Rubio meeting India US ties Russia oil trade

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரூபியோ சொன்ன முக்கிய தகவல்|India-US Trade Deal Almost Done? What Rubio’s Visit Signals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In