Last Updated:
பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி அழைப்பு. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பு.
பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 10 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26வது உச்சி மாநாடு, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றின் முழு கட்டமைப்பையும் அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமிருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் போர்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்த பிரதமர், போர்களும் மோதல்களும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது என்றும், அனைத்துப் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, பிஷ்கெக் பிரகடனத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதைத்தொடர்ந்து பிஷ்கெக் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

