Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' – காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' – காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தவெகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் பனையூரில் நேற்று நள்ளிரவில் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அத்தனை அவசரமாக நள்ளிரவில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

CM Vijay
CM Vijay

கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஆனந்த் நேற்று நள்ளிரவில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக நம்மிடையே பேசிய பனையூர் வட்டாரத்தினர், ‘அமைச்சர் நள்ளிரவில் திட்டமிட்டு கூட்டம் நடத்தவில்லை.

உட்கட்சி பஞ்சாயத்துகள் விஸ்வரூபமெடுத்திருக்கும் சில மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை தலைமை சார்பில் நேரில் வருமாறு அழைத்திருந்தனர். அதன்படி 6 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பனையூருக்கு வந்திருந்தனர். அதேநேரத்தில் அமைச்சர் ஆனந்துக்கு நேற்று எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் இருந்தது. ஈ.சி.ஆரில் எம்.எல்.ஏக்கள் பயிற்சிக் கூட்டத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. மதுராந்தகம் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதற்கிடையில் மதிய வேளையில் கொஞ்ச நேரம் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சில நிர்வாகிகளை சந்தித்தார். மீதமிருப்பவர்களை காத்திருக்க சொன்னார். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து அவர்களை சந்தித்தார்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

அதிகாலை 4 மணி வரை இந்த சந்திப்புகள் நீண்டது என்கிறார். எப்படியும் இன்னும் 6 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் லோக்கல் உட்கட்சிப் பூசல்களை பேசி தீர்க்க தலைமை முடிவெடுத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மா.செக்களின் உள்ளடியால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், மாற்றுக்கட்சியினரின் வருகையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் போன்றோரை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துகிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசவும் திட்டமிட்டிருக்கிறார்கள்’ என்றனர்.



.

Previous Post

ரயில் பயணிகளுக்கு ஷாக்.. இனி இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போட முடியாது.. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு.!

Next Post

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." - முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In