Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை குறையுமா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை குறையுமா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 02, 2026 10:11 PM IST

சர்க்கரை பதுக்கலைத் தடுக்கவும், விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. சர்க்கரை வியாபாரிகள் 15 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது, 1,000 குவிண்டாலுக்கு மேல் இருப்பு

News18
News18

புதிய சர்க்கரைப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதன்படி, கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றைத் தவிர, மற்ற இடங்களில் 15 அக்டோபர் 2026 முதல் 30 நவம்பர் 2026 வரை, சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு காலத்தை 15 நாட்களாக அரசு குறைத்துள்ளதுடன், கையிருப்பு வரம்பையும் 1,000 குவிண்டாலாக நிர்ணயித்துள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, 15 அக்டோபர் 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், ஒரு சர்க்கரை வியாபாரி பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: சர்க்கரை இருப்பை, அது பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது ;  நாடு முழுவதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 1,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைத்திருக்கக் கூடாது.

பிராந்தியத்தின் குறிப்பிட்ட சந்தைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றுக்கான கையிருப்பு வரம்பு 2,000 குவிண்டாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்குப் பகுதி உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வழங்கப்படுகிறது. புவியியல் தடைகள், போக்குவரத்து சிக்கல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அசாமிற்கான உயர் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகளின் நோக்கம், விநியோகக் கட்டமைப்பில் பதுக்கலைத் தடுப்பதும், நுகர்வோரை சீராகச் சென்றடைவதை உறுதி செய்வதுமாகும். தற்போது சர்க்கரையின் சராசரி சில்லறை சர்க்கரை விலை, ஆகஸ்ட் மாத உச்சத்திலிருந்து 15 சதவீதம் சரிந்துள்ளது. குறைந்த ஆலை விலையின் பலன் விநியோக கட்டமைப்பு முழுவதும் சென்றடைவதால், விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலை சர்க்கரை விலை சுமார் 28 சதவீதம் சரிந்து, கடந்த மூன்று வாரங்களாக நிலையாக இருந்து வருகிறது. சர்க்கரையின் போதுமான இருப்பை உறுதி செய்வதற்கும், சந்தையில் அதன் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை இந்த சரிவு பிரதிபலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



.

Previous Post

“ஜனநாயகத்தின் வில்லன் விஜய் !” – மு.க.ஸ்டாலின்! |MK Stalin Slams CM Vijay Over By-Polls at Dharapuram Campaign

Next Post

ஸ்மித் மச்சாருடன் மோடி வீடியோ கால்: விமானி பகிர்ந்த தகவல்கள்|Stabbed Pilot Smit Machchhar Shares Mid-Air Ordeal With Modi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்மித் மச்சாருடன் மோடி வீடியோ கால்: விமானி பகிர்ந்த தகவல்கள்|Stabbed Pilot Smit Machchhar Shares Mid-Air Ordeal With Modi

ஸ்மித் மச்சாருடன் மோடி வீடியோ கால்: விமானி பகிர்ந்த தகவல்கள்|Stabbed Pilot Smit Machchhar Shares Mid-Air Ordeal With Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In