Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

பட்டப்பகலில் பட்டை சாராயம் விற்பனை படு ஜோர்.! – கண்டு கொள்ளாத காவல்துறை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2023
in சமீபத்திய செய்திகள்
0
பட்டப்பகலில் பட்டை சாராயம் விற்பனை படு ஜோர்.! – கண்டு கொள்ளாத காவல்துறை.
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம் மாவட்டம், வீரகனூரில் கள்ளச்சாராயம், கஞ்சா, சந்து கடை, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை வாஸ்துக்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை வாங்கி பயன்படுத்தும் சிறுவர்கள் போதை தலைக்கேறி சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, தாறுமாறாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துவது, பொது இடங்களில் குடித்துவிட்டு பெண்களை ஈவிடிசிங் செய்வது, கோவில்களில் புகுந்து திருடுவது, இருசக்கர வாகனங்களை திருடுவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இது தொடர்பாக விபத்து,திருட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சிறுவர்கள் இந்த கஞ்சாவையும், மலிவு விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தையும் வாங்கி பயன்படுத்தி தங்களது உடல் நலனை கெடுத்துக் கொண்டு பெற்றோர்கள் கண் முன்னே சீரழிந்து வருகிறார்கள். இந்த போதை வஸ்துக்களை ஒழித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது துரதிஷ்டவசமானது.

மேலும், அரசியல் பிரமுகர்கள் என்கிற போர்வையில், சிலர் இந்த சாராய வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏரியா பிரித்து விடும் கேவலமான வேலைகளையும் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே,சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மீது தனி கவனம் செலுத்தி, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்களை ஒழித்து, சீரழிந்து வரும் இளைய சமுதாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாகும்

Previous Post

ஊராட்சிகளில் வரும் 10ம் தேதி முதல் ஆன்லைன் வரி வசூல்!

Next Post

செந்தில் பாலாஜியின் முதல் சொத்து பட்டியல் வெளியீடு – சவுக்கு சங்கர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜியின் முதல் சொத்து பட்டியல் வெளியீடு  – சவுக்கு சங்கர்

செந்தில் பாலாஜியின் முதல் சொத்து பட்டியல் வெளியீடு - சவுக்கு சங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In