Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்… தவித்த பயணிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்… தவித்த பயணிகள்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், பொதுமக்களிடமிருந்து புகார்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு வந்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று, நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே இருளான பகுதியில் நிறுத்தப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேருந்து நிறுத்தப்பட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்
தனியார் பேருந்து ஓட்டுநர் – காவலர்

ஆனால் ஓட்டுநர் எந்த பதிலும் கூறாமல் இருந்திருக்கிறார். அதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்த சிலர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடைத்துக்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநரிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது ஓட்டுநர், “அதிக கட்டணம் வசூலித்தப் புகாரின் பேரில் எங்கள் பேருந்து ஓடக்கூடாது என அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

அதனால் எங்கள் முதலாளி பேருந்தை இயக்கம் வேண்டாம் எனக் கூறிவிட்டார். அதனால் பேருந்தை நிறுத்திவிட்டோம். இனி அமைச்சரிடமோ அல்லது எங்கள் முதலாளியிடமோ நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்” என்றார். இந்தப் பதிலால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் விமலன், ஓட்டுநரிடம், “எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு முக்கியம். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை இப்போது பயணிகள் பாதுகாப்பாக அவர்களின் இல்லங்களுக்குச் செல்ல வேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பிறகு உங்கள் பிரச்னையை தீர்த்துக்கொள்ளுங்கள். உடனே பஸ் இங்கிருந்து புறப்பட வேண்டும்.” என எச்சரித்தார். அதைத் தொடர்ந்து பேருந்து இயக்கப்பட்டது.

தனியார் பேருந்து ஓட்டுநர் - காவலர்
தனியார் பேருந்து ஓட்டுநர் – காவலர்

இதற்கிடையே இன்ஸ்பெக்டரும், ஓட்டுநரும் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘நெல்லையில் சிறப்பு பறக்கும் படை குழுவினர் எந்த சோதனையும் நடத்தவில்லை. ஆனால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் பஸ்சை எடுக்க மறுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறைக்கு அறிக்கை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?



.

Previous Post

இபிஎஃப்ஓ அமைப்பின் 74 ஆண்டுகாலப் பயணம்! அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அட்டைப்படம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அட்டைப்படம்

அட்டைப்படம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In