Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' – அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2026
in அரசியல் செய்திகள்
0
நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' – அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அன்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நேற்று மாலை முதல் நள்ளிரவு வரையிலான காலக்கட்டத்தில் உடன்பிறப்புகள் யாரும் பெரிதாக இறங்கி களமாடவில்லை. கட்சி தன்னுடன் நிற்கவில்லை என்பதை உணர்ந்த அன்பில் இன்னும் உடைந்து போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்
கமிஷ்னர் அலுவலகத்தில்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் அரசியல் விமர்சகர்கள் சிலர், ‘அன்பில் முன்னாள் அமைச்சர் மட்டுமில்லை. அவர் திமுகவின் தலைமைக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படிப்பட்ட ஒருவரை திமுகவின் வழக்கறிஞர் அணியின் முகமாக இருக்கும் ராஜ்யசபா எம்.பி வில்சனின் அலுவலகத்திலிருந்து காவல்துறை தூக்கியிருக்கிறது. இந்தக் கைதை மிகத் தீவிரமாக எதிர்த்து திமுக களமாடியிருக்க வேண்டும்.

ஆனால், திமுக முகாமே சைலண்டாக இருக்கிறது. ‘அரசியல் பழிவாங்கல்’ என சம்பிரதாய அறிக்கையோடு தலைமை நிறுத்திக் கொண்டது. வில்சனின் அலுவலகத்திலிருந்து எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கே ஒரு கட்சிக்காரர் கூட இல்லை. எழும்பூர் அலுவலகத்தில் 4 மணி நேரம் அன்பில் இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் சென்னைக்குள் இருக்கும் முன்னாள் அமைச்சர்களோ மா.செக்களோ யாரும் கமிஷ்னர் ஆபிஸ் பக்கம் தலைக்காட்டவில்லை. கவுன்சிலர் பரிதி மட்டும்தான் போலீஸிடம் சண்டை போட்டு அலுவலகத்துக்குள் சென்றார்.

மருத்துவமனையில் சேகர்பாபு
மருத்துவமனையில் சேகர்பாபு

எழும்பூர் வேட்பாளர் தன் பங்குக்கு ஒரு 10 ஆட்களுடன் வந்து போலீஸிடம் கடமைக்கு வாக்குவாதம் செய்துவிட்டு கிளம்பினார். அதேபாணியில் எம்.பி.கிரிராஜனும் கேட்டில் நின்றபடியே சவுண்டை விட்டார். அதிகபட்சம் 50 உடன்பிறப்புகள் வேண்டுமான எழும்பூரில் கூடியிருப்பார்கள். அன்பில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பிறகுதான் சேகர் பாபுவும் கலாநிதி வீராசாமியும் சீனுக்குள் வருகிறார்கள். நீதிமன்றத்துக்கு வெளியேயும் அதே 50 உடன்பிறப்புகள் மட்டும்தான் இருந்தனர். ஒரு இரண்டு நிமிடம் கூட போலீஸ் வேனை நிறுத்தி தர்ணா செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்பாலாஜி கைதான போது திமுக தலைமை எப்படி ரியாக்ட் செய்தது என யோசித்துப் பாருங்கள். அன்பில் எப்படி தனித்துவிடப்பட்டிருக்கிறார் என்பது புரியும். தலைமை நினைத்திருந்தால் ஆட்களை இறக்கி இந்த கைதை பெரிய பேசுபொருளாக்கி மைலேஜ் தேற்றியிருக்க முடியும். ஆனால், திமுக தலைமை அன்பிலிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. இதுதான் அறிவாலயம் அன்பிலை கைவிட்டு விட்டதோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது’ என்கின்றனர்.



.

Previous Post

மோடி குறித்து கார்கே பேச்சு: பாஜக–காங்கிரஸ் மோதல்|Kharge’s “Modi’s Father” Remark Triggers Political Storm

Next Post

தேனி‌; மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது \ 16 prisoners escape from Theni District Prison; three arrested overnight

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேனி‌; மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது \ 16 prisoners escape from Theni District Prison; three arrested overnight

தேனி‌; மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது \ 16 prisoners escape from Theni District Prison; three arrested overnight

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In