Tuesday, October 27, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நாளை முதல் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு” – பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி!| “Aavin dairy product prices to increase starting tomorrow” – a shock for the public during the festive season!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2026
in அரசியல் செய்திகள்
0
“நாளை முதல் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு” – பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி!| “Aavin dairy product prices to increase starting tomorrow” – a shock for the public during the festive season!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் நெய், தயிர், மோர், லெஸ்சி, பிஸ்கட், இனிப்புகள் உள்ளிட்ட 67 வகையான உப பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வின் அடிப்படையில், 1 லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.80 உயர்ந்து ரூ.780 ஆகவும், ரூ.365-க்கு விற்ற 500 மி.லி., நெய் ரூ.400க்கும், ரூ.160க்கு விற்ற 200 மி.லி., ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதே போல ரூ.30க்கு விற்றமில்க் ஷேக் ரூ.35க்கும், ரூ.35க்கு விற்ற 500 மி.லி., தயிர் ரூ.40, ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பா ரூ.160 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இனிப்பு வகைகளின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை அக்.,28 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் குடும்ப பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகை காலத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம் | Mumbai: Passengers walk along tracks due to disruption in train services; 3 killed after being struck by train

Next Post

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' – ட்ரம்ப் அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' – ட்ரம்ப் அறிவிப்பு!

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' - ட்ரம்ப் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In