Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்” – பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
“நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்” – பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 4:27 PM IST

அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ் மற்றும் மேஹ்சானா-சபர்மதி ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பனஸ்காந்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலையும், சர்வதேச நெருக்கடிகளையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள், தேசம் சிரமங்களை எதிர்கொள்ளும்போது மகிழ்ச்சியடைகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச நிலையற்ற தன்மைகளைக் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இக்கட்டான காலகட்டத்தில் உரங்கள் மற்றும் சமையல் எரிவாயு (கியாஸ்) தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புவதாகத் தெரிவித்தார். நாட்டின் அமைதியைக் குலைத்து, தன்னைக் களங்கப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது என்றும், ஆனால் இந்தச் சவால்களை அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் உரங்களின் விலை பலமடங்கு உயர்ந்த போதிலும், அந்தச் சுமை இந்திய விவசாயிகளைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு பார்த்துக் கொண்டதாகப் பிரதமர் கூறினார். இதற்காக அரசு இதுவரை ரூ.16 லட்சம் கோடிக்கு மேல் மானியமாகச் செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், PM-KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்குகளுக்கு நிதி நேரடியாகச் சென்று சேருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவரை 26 கோடிக்கும் அதிகமான மண் பரிசோதனை அட்டைகள் (Soil Health Cards) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபர் 7 அன்றுடன் தான் பொதுச் சேவையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2001-ல் தான் முதல்முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்களை நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் மரபுசார்ந்த கட்டில்களில் அமர்ந்திருந்தது அனைவரையும் ஈர்த்தது குறித்தும் அவர் நகைச்சுவையுடன் பேசினார். இறுதியாக, அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ் மற்றும் மேஹ்சானா-சபர்மதி மெமு ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.



.

Previous Post

“எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" – அமைச்சர் ரமேஷ்

Next Post

”எல்லா முடிவையும் நீங்கதான் எடுத்தீங்க…” – சசிகலாவால் கதறும் சக்கரவர்த்தி | Blast Interview | Sasikala Made All Decisions, Says Chakravarthy in Tears

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”எல்லா முடிவையும் நீங்கதான் எடுத்தீங்க…” – சசிகலாவால் கதறும் சக்கரவர்த்தி | Blast Interview | Sasikala Made All Decisions, Says Chakravarthy in Tears

''எல்லா முடிவையும் நீங்கதான் எடுத்தீங்க...'' - சசிகலாவால் கதறும் சக்கரவர்த்தி | Blast Interview | Sasikala Made All Decisions, Says Chakravarthy in Tears

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In