மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் பொது விநியோக நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுகுறித்து, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் புதிய குடும்ப அட்டை பெறாமலேயே நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களுக்குரிய உணவு தானியங்களைப் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இடம்பெயரும் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, பயனாளிகளை மையப்படுத்திய நலத்திட்ட விநியோக அமைப்பாக இது உருவெடுத்துள்ளது.

