Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" – எடப்பாடி பழனிசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2026
in அரசியல் செய்திகள்
0
"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" – எடப்பாடி பழனிசாமி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது.

அதிமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவி இருக்கிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

குதிரை பேரத்தை நடத்தியதன் விளைவுதான்.!

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு, எந்தக் கட்சிக்கும் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், ஒருசில கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை அமைத்ததுடன், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க. அரசை, மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தை நடத்தியதன் விளைவுதான், தற்போதைய இடைத்தேர்தல் என்பதை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி
அதிமுக – எடப்பாடி பழனிசாமி

குறுக்கு வழியில் வெற்றி

2026, பொதுத் தேர்தலின்போது நம்முடன் இருந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஒருசிலர் இந்த இடைத்தேர்தலில் நம்முடன் இல்லை. ஆனால், ஆளும் கட்சியோ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. இந்த இடைத் தேர்தலில் ஆளும் த.வெ.க. பண பலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கியது. அதோடு, கழகத்திற்குத் துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் நம்மை எதிர்த்து நின்றார்கள்.

இந்த இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த த.வெ.க., வாக்காளர்களுக்குப் பல்வேறு ஆசை வார்த்தைகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்து, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தாராபுரம் தொகுதி வேட்பாளர் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு புனைந்து, மாவட்டக் கழகச் செயலாளரையே சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலரை அச்சுறுத்தி த.வெ.க-வில் இணைத்து, குறுக்கு வழியில் வெற்றி காண பல்வேறு யுக்திகளைக் கையாண்டது.

இடைத்தேர்தல் வெற்றி: “மிருகக் குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர்” – முதல்வர் விஜய்

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்!’

‘அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ’ என்று வீர வசனம் பேசிய கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்தலுக்கு தெருத் தெருவாக அலைந்து விசில் ஊத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டதுடன், காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்து, ஜனநாயகப் படுகொலை செய்து ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இது, அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. பொதுவாக, இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமையும்.

நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். அதுபோல், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை கேலி செய்தவருக்கு, இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையில் நுழைந்துவிட்டதாக த.வெ.க. நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே. இந்தத் தற்காலிக வெற்றியைக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்.

ஏனென்றால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் கட்டிக் காப்பாற்றிய ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு இரும்புக் கோட்டை ஆகும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்’ என்பது ஆண்டவரின் தீர்ப்பு. ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நான் முதலமைச்சரான காலத்தில் சந்தித்த பிரச்னைகள் எக்கச்சக்கம்

இந்தத் தேர்தல் வெற்றியால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தும், இரண்டு தொகுதிகளிலும் நமக்கு நல்ல வாக்குகள் கிடைத்திருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கியபோது சந்தித்த சவால்கள் ஏராளம். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளும் எண்ணிலடங்காதவை. நான் முதலமைச்சரான காலத்தில் சந்தித்த பிரச்னைகள் எக்கச்சக்கம்.

எப்போதும், பிள்ளை பிடிக்கும் கும்பல் போல, நம்முடைய கழக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி பிடித்தே ஆட்சியில் இருக்கிறது தவெக எனும் தற்காலிக வெற்றிக் கழகம். இந்தச் சோதனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முறியடிக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று ஆதரவளித்த தோழமை கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; புதிய நீதிக் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்

நெஞ்சார்ந்த நன்றி

குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மாறாத விசுவாசம்கொண்டு, கழக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அல்லும் பகலும் அயராது தேர்தல் பணிகளை ஆற்றிய தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அளவிலான கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அதிமுக ஆயிரம் காலத்துப் பயிர்

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஆலமரம்; ஆயிரம் காலத்துப் பயிர்; இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம்” எனச் சூளுரைத்தவாறு, தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ மக்கள் பணிகளில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? அபாயமா..?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppbedappadi palanisamy on mathuranthagam, tharapuram election



.

Previous Post

Delhi | “தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு”- உதயநிதி ஸ்டாலின் | CJP protest against chief election commissioner | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…? யூடியூப் பிரபலம் மீது வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?  | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…? யூடியூப் பிரபலம் மீது வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?  | India News (இந்தியா செய்திகள்)

கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…? யூடியூப் பிரபலம் மீது வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?  | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In