காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும் கவிழ்த்துவிடும். எனவே, தவெக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் ராம் மாதவ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜவஹர்லால் நேருவின் 138-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு.
அப்போது, “ காங்கிரஸ் கட்சி எப்போது திமுக ஆட்சியைக் கவிழ்த்தது? ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதும், கூட்டணிகளுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், மாறி மாறி வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதும் இயல்பான ஒன்று.
இவையெல்லாம் இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக நடக்கும் விஷயங்கள் அல்ல. அப்படிப் பார்த்தால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக, அதிலிருந்து விலகி நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லையா?
மேலும், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் திமுக அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தார்களே, அதற்கு என்ன பெயர் சொல்வது? எனவே, இது போன்ற அரசியல் நகர்வுகளைத் “துரோகம்’ என்று அழைக்க முடியாது.
