Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தூய்மை நகரங்கள் பட்டியல் 2026: முதலிடம் பிடித்தது நவி மும்பை; சூரத், விஜயவாடாவிற்கு அடுத்தடுத்த இடங்கள் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
தூய்மை நகரங்கள் பட்டியல் 2026: முதலிடம் பிடித்தது நவி மும்பை; சூரத், விஜயவாடாவிற்கு அடுத்தடுத்த இடங்கள் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 13, 2026 6:10 PM IST

3,000-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள், ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்

குடியரசு தலைவரிடம் விருது பெறும் காட்சி.
குடியரசு தலைவரிடம் விருது பெறும் காட்சி.

மத்திய அரசின் 2025-26-ஆம் ஆண்டிற்கான தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பில் (Swachh Survekshan), தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த இந்தூரைப் பின்னுக்குத் தள்ளி, மகாராஷ்டிராவின் நவி மும்பை (Navi Mumbai) இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். நாடு முழுவதும் 4,700-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்ற இந்த ஆய்வில், குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தூர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வழிகாட்டி நகரம்’ (Mentor City) பிரிவில் இணைக்கப்பட்டு, தனது துணை நகரமான தேபல்பூருடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்பிரிவில் அகமதாபாத் – சனந்த் முதலிடத்தையும், திருப்பதி – குப்பம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மக்கள் தொகை மற்றும் புவியியல் அடிப்படையிலான பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் விசாகப்பட்டினம் முதலிடத்தையும், 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உஜ்ஜைன் முதலிடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், நதிக்கரை நகரங்களில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா, கடலோர நகரங்களில் ஒடிசாவின் பூரி, மற்றும் இமயமலை நகரங்களில் உத்தரகாண்டின் ருத்ராபூர் ஆகியவை முதலிடம் பெற்றுள்ளன. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் 3,000-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள், ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம் வீடு வீடாகக் குப்பை சேகரிப்பு 74 சதவீதமாகவும், வெளிப்படையான தூய்மை 70 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவி மும்பையில் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தூய்மை கணக்கெடுப்பானது தெருக்களைச் சுத்தம் செய்தல், கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத்தை மட்டுமே மதிப்பிடுகிறது; காற்றின் தரத்தை (AQI) கணக்கில் கொள்வதில்லை.

கட்டுமானப் பணிகளின் தூசி, வாகனப் போக்குவரத்து மற்றும் மும்பையின் அருகில் உள்ளதால் நவி மும்பையின் காற்றுத் தரம் குளிர்காலத்தில் மோசமடைகிறது. உண்மையில், ஐஸ்வால் மற்றும் ரிஷிகேஷ் போன்ற பசுமையான சிறிய நகரங்களே தூய்மையான காற்றைக் கொண்டுள்ளன; மேலும் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளுக்கான ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026’ பட்டியலில் லக்னோ முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

மேக்கேதாட்டு அணை: மோடியிடம் உதவி கேட்ட டி.கே.சிவகுமார்|Mekedatu Dam Row: Shivakumar Makes a Request to PM Modi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In