Last Updated:
புதுதில்லியில் 2026 நவம்பர் 11-ல் நடைபெறும் விழாவில், சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.
இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2025-26-ம் ஆண்டின் சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகளை, புதுதில்லியில் உள்ள விஞ்யான் பவனில், 2026 நவம்பர் 11-ம் தேதி வழங்குகிறார்.
இதுகுறித்து, இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதிவது, ” மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், தூய்மைக்கான புதிய முன்னெடுப்பு: கைகோர்ப்போம் இணைந்து தூய்மைப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற தூய்மைப்பணிக்கான கள ஆய்வு வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் முன்னிலையில் நடைபெறவுள்ள 10-வது பதிப்புக்கான விருது வழங்கும் விழாவில், தூய்மைப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்கிறார்.
10-வது பதிப்பின் ஒரு பகுதியாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப்பணி தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கழிவுகளை தரம்பிரித்தல், கழிவுகளை சேகரித்தல், அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை, இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் பணி, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல், நீர்மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விரிவான கள ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நகர்ப்புறங்களில் வீட்டுக்கு வீடு குப்பைகளை சேகரிக்கும் பணி 2024-ம் ஆண்டில், 52 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 74 சதவீதத்தை எட்டியுள்ளது. இதேபோல் நீர் மேலாண்மை, கழிவுகளை தரம்பிரித்தல் உள்ளிட்ட பணிகளின் சதவீதமும் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த கள ஆய்வின்படி, தூய்மையான நகரங்கள், தூய்மைப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

