நடக்க முடியாத முதியோரிடம் நேரடியாக வந்து மனுவை பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க நடக்க முடியாத வயதானவர் வந்ததையறிந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அவர் இருக்கும் இடத்திற்கே நேரடியாக வந்து மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுப்பதற்காக மாவட்ட காவல்துறை அலுவலகம் வந்திருந்தார். ராமகிருஷ்ணன் நடக்க முடியாத வயதானவர்.இதையறிந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தரை தளத்திற்கு இறங்கி வந்து ராமகிருஷ்ணன் என்பவரிடம் பிரச்சனையை கேட்டறிந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

