Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கவே ராகுல் காந்தி நவ. 1ஆம் தேதி போராட்டம் நடத்துகிறார்” – வானதி சீனிவாசன் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
“தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கவே ராகுல் காந்தி நவ. 1ஆம் தேதி போராட்டம் நடத்துகிறார்” – வானதி சீனிவாசன் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கவே நவம்பர் 1ம் தேதி ராகுல் காந்தி போராட்டம் நடத்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்தி, போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.

தாங்கள் நேரடியாகப் போராடினால் மக்களால் விரட்டப்படுவோம் என்பதை உணர்ந்து, கரப்பான் பூச்சி பெயரில், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போல, இந்தியாவிலும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்ட இளம்தலைமுறையினரும், பொதுமக்களும், கரப்பான் பூச்சியை விரட்டியடித்தனர்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி என்ற பெயரில் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ளனர். சோனியா காந்தியின் கட்டுக்குள் காங்கிரஸ் கட்சி வந்த பிறகு, அக்கட்சியின் எந்த செயல்பாட்டிற்கும் பின்னாலும், இந்து விரோதப் போக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது வெறும் பண்டிகை, கொண்டாட்டம் மட்டுமல்ல. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் தீபாவளி பண்டிகையை சுற்றிதான்தான் சுழல்கிறது. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கவே நவம்பர் 1ம் தேதி @RahulGandhi போராட்டம் நடத்துகிறார்.


பிரதமர் @narendramodi தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்தி, போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.

தாங்கள் நேரடியாகப் போராடினால் மக்களால் விரட்டப்படுவோம் என்பதை உணர்ந்து, கரப்பான் பூச்சி பெயரில், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போல, இந்தியாவிலும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்ட இளம்தலைமுறையினரும், பொதுமக்களும், கரப்பான் பூச்சியை விரட்டியடித்தனர்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி என்ற பெயரில் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ளனர். சோனியா காந்தியின் கட்டுக்குள் காங்கிரஸ் கட்சி வந்த பிறகு, அக்கட்சியின் எந்த செயல்பாட்டிற்கும் பின்னாலும், இந்து விரோதப் போக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது வெறும் பண்டிகை, கொண்டாட்டம் மட்டுமல்ல. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் தீபாவளி பண்டிகையை சுற்றிதான்தான் சுழல்கிறது. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.

தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், பொருட்கள் வாங்குவதற்காக, நாடு முழுவதும் மக்கள் கடைத் தெருக்களுக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளியின் அதிகபட்ச வியாபாரம் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும். அன்றைய தினம், சிறு இடையூறு செய்தாலும் அது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மொத்த வணிகத்தையும் கெடுத்து விடும்.

ஆனால், காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு, தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து, தலைநகர் டில்லியில் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பாதிக்கும். எனவே, தீபாவளி முடிந்த பிறகு. போராட்டம் நடத்துங்கள் என, வர்த்தகர் சங்கங்கள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பின.

ஆனால், வணிகர்கள் உணர்வையும், இந்துக்களின் உணர்வையும் கொஞ்சம் கூட மதிக்காமல், நவம்பர் 1ம் தேதி போராட்டம் நடத்தியே தீருவேன் என, ஆணவத்துடன் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் மாற்று மத பண்டிகைகளின்போது இதுபோன்ற போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இதுவரை நடத்தியது இல்லை. ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி முதல் வாரத்திலும் வெளிநாட்டுக்கு சென்று கொண்டாடும் ராகுல் காந்தி, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதனால்தான், வணிகர்களின் வேண்டுகோளை ஆவணத்துடன் புறக்கணித்து, நவம்பர் 1ல் போராட்டம் நடத்துகிறார்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடனும், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வியாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்துடனும் நவம்பர் 1ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள ராகுல் காந்தியை, இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதற்கான தண்டனையை மக்கள் நிச்சயம் தருவர்.

@INCIndia

— Vanathi Srinivasan (@VanathiBJP) October 31, 2026

தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், பொருட்கள் வாங்குவதற்காக, நாடு முழுவதும் மக்கள் கடைத் தெருக்களுக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளியின் அதிகபட்ச வியாபாரம் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும். அன்றைய தினம், சிறு இடையூறு செய்தாலும் அது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மொத்த வணிகத்தையும் கெடுத்து விடும்.

ஆனால், காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு, தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து, தலைநகர் டில்லியில் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பாதிக்கும். எனவே, தீபாவளி முடிந்த பிறகு போராட்டம் நடத்துங்கள் என, வர்த்தகர்  சங்கங்கள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பின.

ஆனால், வணிகர்கள் உணர்வையும், இந்துக்களின் உணர்வையும் கொஞ்சம் கூட மதிக்காமல், நவம்பர் 1ம் தேதி போராட்டம் நடத்தியே தீருவேன் என, ஆணவத்துடன் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் மாற்று மத பண்டிகைகளின்போது இதுபோன்ற போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இதுவரை நடத்தியது இல்லை. ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி முதல் வாரத்திலும் வெளிநாட்டுக்கு சென்று கொண்டாடும் ராகுல் காந்தி, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதனால்தான், வணிகர்களின் வேண்டுகோளை ஆவணத்துடன் புறக்கணித்து, நவம்பர் 1ல் போராட்டம் நடத்துகிறார்.

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடனும், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வியாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்துடனும் நவம்பர் 1ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள ராகுல் காந்தியை, இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதற்கான தண்டனையை மக்கள் நிச்சயம் தருவர்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

DMK ADMK ஆதரவில் களம் காணும் NTK Seeman? | TVK | CM VIJAY | Imperfect Show

Next Post

தங்கை மகளின் திருமணத்துக்கு குடும்ப இடத்தை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல’ – ஷர்மிளா வேதனை | ys-jagan-denies-sharmila-daughter-wedding-venue-property-dispute

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கை மகளின் திருமணத்துக்கு குடும்ப இடத்தை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல’ – ஷர்மிளா வேதனை | ys-jagan-denies-sharmila-daughter-wedding-venue-property-dispute

தங்கை மகளின் திருமணத்துக்கு குடும்ப இடத்தை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை | ys-jagan-denies-sharmila-daughter-wedding-venue-property-dispute

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In