Last Updated:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது என்பது மரபுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..!
தீப திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் கோயில் அமைந்துள்ள மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 24 மணி நேரமும் தூணில் தீபம் எரியவிட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கோயிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும், தீபத் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது என்பது மரபுக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

