Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திம்மாவரம்: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்; வகுப்பறைக்குள் தேங்கும் மழைநீர்- குழந்தைகள் கல்வி பாதிப்பு! | Thimmavaram School Old Building Must Be Demolished, Compound Wall Needed: Locals Demand

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
திம்மாவரம்: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்; வகுப்பறைக்குள் தேங்கும் மழைநீர்- குழந்தைகள் கல்வி பாதிப்பு! | Thimmavaram School Old Building Must Be Demolished, Compound Wall Needed: Locals Demand
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பேசுகையில், “இந்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. தற்போது இந்தப் பள்ளிக் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கட்டடத்தின் சுவர் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. சிறிது மழை பெய்தாலும் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அதுமட்டுமன்றி, பள்ளிக் கட்டடத்தின் மீது செடிகள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு பின்புறம் மிகவும் புதராக இருப்பதால் அடிக்கடி பாம்பு வருகிறது. இதனால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்க மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பள்ளி குழந்தைகள் அருகில் இருந்த கட்டடத்தில் பயின்று வந்தார்கள். அது இன்னும் மோசமான நிலையில் உள்ளது. ஒருமுறை பள்ளியில் பயிலும் குழந்தை மீது அதிலிருந்து ஓடு விழுந்துவிட்டது. அப்போது முதல் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்துவதில்லை.

மேலும், இங்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்தப் பள்ளியில் உள்ள கழிவறையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதியையும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி, பள்ளி சாலையை ஒட்டியே உள்ளதாலும் தடுப்புச்சுவர் இல்லாததாலும் விபத்து ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. நாங்களும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இதனைச் சரி செய்து தர மறுக்கிறார்கள். எனவே, இந்தப் பள்ளிக் கட்டடத்தினை விரைந்து சரி செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் தகவலுக்காக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியிடம் விசாரித்தபோது, “இந்தப் பள்ளிக் கட்டடத்தில் தற்போது வகுப்புகள் நடத்துவதில்லை. மேலும், இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தித் தருமாறு பலமுறை நாங்களும் மனு கொடுத்துள்ளோம்.

கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அது மிகவும் சிதிலமடைந்துள்ளது. மேலும், தேர்தலின் போது அமைக்கப்பட்ட சாலை, பள்ளியின் நிலமட்டத்தை விட உயரமாகப் போடப்பட்டுள்ளதால், சிறு மழை பெய்தாலும் வகுப்பறை முழுவதும் மழைநீரால் நிரம்பிவிடுகிறது.

சாலை அமைப்பதற்கு முன்பு அவ்வாறு மழைநீர் வகுப்பறையில் தேங்கவில்லை. அதேபோன்று, இந்தப் பள்ளிக் கழிவறையைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்துத் தருவதாகக் கூறினார்கள். அதை மட்டும் செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கமலக்கண்ணனிடம் கேட்டபோது, “நாங்களும் சென்ற வாரம் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். பள்ளிக் கட்டடத்தை விரைவில் சரி செய்து விடுவோம்; பின்புறம் உள்ள புதர்களைச் சுத்தம் செய்யக் கூறியுள்ளோம். விரைவில் சரி செய்து தரப்படும்” என்று அவர் கூறினார்.



.

Previous Post

சூரத் – உதய்பூர் வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்! பயண நேரம் மற்றும் கட்டண விவரங்கள் இதோ | Surat To Udaipur Vande Bharat Express Train Launch: Schedule, Timings, And Fare Details 2026

Next Post

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஐஆர்சிடிசி அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – சீட் நிலவரம் மற்றும் புக்கிங் டிப்ஸ்! | IRCTC Tour Packages 2026: Araku Vistadome & Srisailam Booking Tips And Seat Availability Guide

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காந்தி ஜெயந்தி விடுமுறை: ஐஆர்சிடிசி அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் – சீட் நிலவரம் மற்றும் புக்கிங் டிப்ஸ்! | IRCTC Tour Packages 2026: Araku Vistadome & Srisailam Booking Tips And Seat Availability Guide

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஐஆர்சிடிசி அரக்கு & ஸ்ரீசைலம் டூர் பேக்கேஜ் - சீட் நிலவரம் மற்றும் புக்கிங் டிப்ஸ்! | IRCTC Tour Packages 2026: Araku Vistadome & Srisailam Booking Tips And Seat Availability Guide

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In