Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" – ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2026
in அரசியல் செய்திகள்
0
"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" – ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்தப் பதிவுகளுக்குப் பதிலளிப்பது போல, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களின் தேவைகளிலிருந்துதான் திட்டங்கள் உருவாகின்றன.

ஒரு திட்டம் என்பதையோ… அதை நிறைவேற்றும் நடவடிக்கையோ ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” – மு.வீரபாண்டியன்

மக்கள் நன்மைக்காக…

2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு – ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்த பல திட்டங்களை, அதன்பிறகு வந்த தி.மு.க தலைமையிலான அரசின் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

சில திட்டங்களை அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி அவர்களும் தொடங்கி வைத்தார்.

ஒரு அரசாங்கம் தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்து செய்து அதைத் திறந்து வைப்பது வழக்கமாக நடைபெற்றதுதான். அது சரியும்கூட. காரணம், திட்டங்களும், அதன் பயன்களும் “மக்கள் நன்மைக்காக…” மட்டுமே.

தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல்…

அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது.

கோவை மக்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து ‘பெரியார் அறிவுலகம்’ பயன் அளிக்கும்.

அதைக் கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவிதத் தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று ‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகமும்
தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்
பொறாமைப் புலம்பல்களும்….

மக்களின் தேவைகளில் இருந்துதான் திட்டங்கள் உருவாகின்றன. ஒரு திட்டம் என்பதையோ… அதை நிறைவேற்றும் நடவடிக்கையோ ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது. அதுவும் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், மக்களின் தேவைகளைத் தீர்ப்பதற்காக, மக்களின் வரிப்பணத்தில், அப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு, திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைக்கு கொண்டுவருகிறது. இடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், அடுத்து வரும் அரசு அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவருவதில் என்ன பிழை இருக்க முடியும்? புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே, ஒரு திட்டத்தையோ… கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அதில் குற்றம் சொல்ல முடியும். மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்றாலும், அதை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடரும் ஒரு அரசாங்கத்தை யார் குறை சொல்ல முடியும்? என்ன குற்றம் காண முடியும்? அப்படிச் செய்வதற்கு யாருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு – ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்த பல திட்டங்களை, அதன்பிறகு வந்த தி.மு.க தலைமையிலான அரசின் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்; சில திட்டங்களை அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி அவர்களும் தொடங்கி வைத்தார். மற்ற தி.மு.க அமைச்சர்களும் தொடங்கி வைத்துள்ளனர். அதைத் தாங்களே சிந்தித்து செயல்படுத்தியதைப் போல, கோடிக்கணக்கில் அரசு பணத்தை – மக்கள் பணத்தை விரயமாக்கி விளம்பரமும் செய்து கொண்டனர்.

அதற்கு உதாரணமாக ஒன்றல்ல… இரண்டல்ல… ஏராளமான திட்டங்களைப் பட்டியல் போட முடியும். குறிப்பாக, கொங்கு மண்டல மக்களின் பல்லாண்டு கால கனவாக இருந்த அத்திக்கடவு – அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டன. கொரோனா தொற்று பிரச்சனையால் 20 சதவிகித வேலைகள் முடியாமல் இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படி முடிக்கப்பட்டிருந்த வேலைகளை 2022-ல் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024 – ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரம் செய்து கொண்டார்.

அதுபோல, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2020-ஆம் ஆண்டு, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கப்பட்டன. 90 சதவிகித வேலைகள் முடிந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தார். அப்போது, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் விளம்பரம் செய்து கொண்டார்.

கோவை மருத்துவக் கல்லூரியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் JICA (Japan International Corporation Agency) பன்னோக்கு சிறப்புப் பிரிவு கட்டிடத்திற்கான வேலைகள், அந்தக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களை 150-லிருந்து 250 ஆக உயர்த்துவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கல்வித் தொகுதி, விடுதிகள் மற்றும் நூலகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியதுதான். அவற்றில் மீதம் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு, மார்ச் 2024-இல் அன்றைய முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, அதைத் தனது ஆட்சியின் சாதனையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

இதே கதைதான் திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டவை. அவற்றுக்கான திறப்பு விழாக்களை எல்லாம் தி.மு.க ஆட்சியில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தார்கள். அதுபோலவே, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுக்கான அடித்தளம் போடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். அதைத்தான் ஜனவரி 2022 அன்று அன்றைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசர அவரசமாகத் திறந்து வைத்தார். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பழங்குடியினருக்கான சிறப்பு வார்டு உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட புதிய 700 படுக்கை மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தை 6 ஏப்ரல் 2025 திரு. மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்படி ஒரு அரசாங்கம் தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்து செய்து அதை திறந்து வைப்பது வழக்கமாக நடைபெற்றதுதான். அது சரியும்கூட. காரணம், திட்டங்களும், அதன் பயன்களும் "மக்கள் நன்மைக்காக…" மட்டுமே.

அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது; குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துகிறது; பாதியில் நிற்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் போன்றவை, "மக்கள் நலனே முக்கியம்" என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தமையிலான த.வெ.க அரசும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக… மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அவை. அந்த அடிப்படையில்தான், கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்துள்ளார். கோவை மக்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து ‘பெரியார் அறிவுலகம்’ பயன் அளிக்கும். அதை கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவித தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று ‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தம்பட்டம் அடித்தோ… தன்னை முன்னிறுத்தியோ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் புகழும் பெருமையும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அவருடைய புகழும் பெருமையும் உலகம் முழுதும் தமிழர்கள் வாழும் அத்தனை நாடுகளிலும் ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட ஒன்று!

ஆனால், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவரைப்போல், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் திட்டங்களை, தானே சிந்தித்து… தான் ஒருவரை வடிவமைத்து, கட்டமைத்துச் செயல்படுத்தியதைப் போல "காலையில் ஒரு அறிக்கை… மாலையில் ஒரு அறிக்கை" என்று காழ்ப்புணர்வில் வெளியிட்டு தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்; பொறாமையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனை திட்டங்களை நீங்களே கொண்டுவந்தீர்கள் என்று மக்கள் உணர்ந்திருந்தால் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பார்களே… பெயரளவுக்கு திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த ஊழல்கள், தேர்தல் நேரத்தில் வெற்று விளம்பரத்திற்காக செய்யப்பட்ட அறிவிப்புகளால் வெறுத்துப் போனதால்தானே, கொளத்தூர் மக்களே உங்களை தோல்வியடையச் செய்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பினர். அதன்பிறகும், உண்மையை உணராமல், "என் திட்டம்… என் திட்டம்…" என்று இன்றும் பெருமைபேசி இப்போதும் சமூக வலைத்தளங்களில் பொறாமையில் பொங்கித் தவிக்கும் உங்களை மக்கள் இனிமேல் எந்தக் காலத்திலும் நம்பமாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது

என்ற வள்ளுவரின் குறளுக்குப் பொருள்,

"பொறாமை கொண்டவரைக் கெடுப்பதற்கு வேறு எந்தப் பகையும் வேண்டாம். அவர்களின் பொறாமையே அவர்களை அழித்துவிடும்" என்பதுதான்.

அதுபோல், இப்போது பொறாமையால் பொங்கிப் பொருமிக் கொண்டிருக்கும் உங்களை உங்கள் பொறாமையே அழித்துவிடும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, மக்கள் நன்மைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்; தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து வெற்றி நடைபோடும்!

— Aadhav Arjuna (@AadhavArjuna) October 16, 2026

காலை, மாலை ஓர் அறிக்கை

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவரைப்போல்,

முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் திட்டங்களை, தானே சிந்தித்து… தான் ஒருவரால் வடிவமைத்து,

கட்டமைத்துச் செயல்படுத்தியதைப் போல “காலையில் ஒரு அறிக்கை… மாலையில் ஒரு அறிக்கை” என்று காழ்ப்புணர்வில் வெளியிட்டுத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்; பொறாமையில் துடித்துக்கொண்டிருக்கிறார்.

இத்தனை திட்டங்களை நீங்களே கொண்டுவந்தீர்கள் என்று மக்கள் உணர்ந்திருந்தால் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பார்களே…

தோல்வியடையச் செய்தார்கள்…

பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த ஊழல்கள், தேர்தல் நேரத்தில் வெற்று விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட அறிவிப்புகளால் வெறுத்துப் போனதால்தானே, கொளத்தூர் மக்களே உங்களைத் தோல்வியடையச் செய்தார்கள்.

இப்போது பொறாமையால் பொங்கிப் பொருமிக்கொண்டிருக்கும் உங்களை உங்கள் பொறாமையே அழித்துவிடும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, மக்கள் நன்மைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்துத் தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்; தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து வெற்றி நடைபோடும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?



.

Previous Post

“அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே எதிர்க்கட்சிகள் போராட்டம்! சீர்திருத்தம் நோக்கமல்ல” – நிதின் நபின்

Next Post

News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? – வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? – வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

News18 UP மெகா சர்வே: யோகி ஆதித்யநாத் Vs அகிலேஷ் யாதவ்! மக்கள் ஆதரவு யாருக்கு? - வெளியான முடிவுகள் | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In