Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து  இடும்பாவனம் கார்த்திக்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா.

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

கார்த்திகா
கார்த்திகா

நாதக கார்த்திகா கைதுக்கு கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேசினோம். ” இது தவெக அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கு. திட்டமிட்டு குறிவைத்து கைது செய்திருக்கிறார்கள். பொதுவாகத் தேர்தல் சமயத்தில் வழக்குப்பதிவு செய்வார்கள், ஆனால் கைது செய்ய மாட்டார்கள்.

12 ஆண்டுகளுக்குக் கீழ் தண்டனை கிடைக்கக்கூடிய பிரிவுகளில் வழக்குத் தொடுத்தால் கைது என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவேளை அவர்கள் சட்டத்தை மீறியிருந்தாலும் வழக்குத் தொடுத்தால் அதை நாம் தமிழர் கட்சி சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும், ஓடி ஒளியப் போவதில்லை. ஆனால் கைது செய்ய வேண்டும், பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை’- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்

திட்டமிட்டே அலைக்கழிப்பு செய்திருக்கிறார்கள்

அதிகாலை 5 மணிக்கே சென்று கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யும்போது அவர்கள் எந்தவித ஒத்துழைப்பும் தராமல் இல்லை; அதே வேளையில் ஆடை மாற்றுவதற்கோ அல்லது குறைந்தபட்சம் ஆயத்தமாவதற்கோ கூடக் கால அவகாசம் தராமல், எதற்காகக் கைது செய்கிறோம் என்ற விவரத்தையும் தெரிவிக்காமல், 5 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்து பின்னரே தாராபுரத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

கோவையிலிருந்து தாராபுரம் செல்வதற்கு 5 மணி நேரத்திற்கும் மேலாகவா ஆகும்? அப்படியென்றால் திட்டமிட்டே இந்த அலைக்கழிப்பு நடத்தப்பட்டுள்ளது. இங்கு கைது செய்யப்பட வேண்டியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழக அரசின் ஆட்சியில் 100 கோடிக்கும் அதிகமான போதைப்பொருட்களைக் கடத்திய வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் ஒன்றிய அரசின் சிறப்புப் படை உள்ளே வருகிறது.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

மிக மோசமான பாசிச வெறியாட்டம்

தமிழக அரசின் செயலற்ற தன்மை வெட்ட வெளிச்சமாகியுள்ள இந்த வேளையில், அதை மடைமாற்றுவதற்கும் நாம் தமிழர் கட்சியைப் பழிவாங்குவதற்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது முழுக்க முழுக்க மிக மோசமான பாசிச வெறியாட்டம் என்றே கூற வேண்டும்.

குறைந்தபட்ச சகிப்புத்தன்மையோ, ஜனநாயக உணர்வோ, மாற்றுக் கருத்தை ஏற்கும் பக்குவமோ இன்றி அராஜகப் போக்கில் செயல்படுகிறார்கள். இதுவரை வேட்பாளராகப் போட்டியிட்டவர்களை இடைத்தேர்தலுக்குப் பிறகு கைது செய்ததாக வரலாற்றுச் செய்தியே இல்லை. தேர்தல் கால வழக்கைக் காரணம் காட்டி கைது செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இறுதி நாள் பரப்புரையின்போது முதலமைச்சர் வரும் வழியில் போராட்டம் நடத்தினார்கள் என்பது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

போலி பிம்பத்தை தோலுரித்துக் காட்டுகிறது

இறுதி நாள் பரப்புரை மாலை 5 அல்லது 6 மணியுடன் முடிந்துவிடும். அந்த நேரத்தில் அனைத்துக் கட்சிகளுமே பரப்புரை செய்வார்கள். ஆனால் இவர்களது ஆட்சியில் அதிமுகவிற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது, நாம் தமிழர் கட்சியின் பரப்புரைக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக வழியில் சாலையில் நின்று கார்த்திகா போராடுகிறார்.

அதற்கு வழக்குத் தொடுத்தால் கூட எதிர்கொள்ளத் தயார்; ஆனால் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! நாம் தமிழர் கட்சியை அச்சுறுத்த வேண்டும், அடக்க வேண்டும் என்பதற்காகவே இது செய்யப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக இவர்களது போலி பிம்பத்தையும் முகத்திரையையும் நாம் தமிழர் கட்சிதான் தோலுரித்துக் காட்டுகிறது.

சீமான்
சீமான்

நாங்கள் அஞ்சமாட்டோம்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்ததால் பல விஷயங்களைப் பேச முடிவதில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சி அனைத்தையும் தட்டிக்கேட்பதால் எங்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை வன்மையாகக் கண்டித்து நாம் தமிழர் கட்சி வலுவான எதிர்வினையாற்றும். மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

இன்னும் வீரியமாகக் களமிறங்குவோமே தவிர அடங்கி ஒடுங்க மாட்டோம். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்குப் பயந்து ஒதுங்கியிருந்த காலத்திலேயே , நாங்கள் அவர்களை எதிர்த்துதான் அரசியல் செய்தோம். நாம் தமிழர் கட்சி கடந்து வந்த 16 ஆண்டுகளில் பார்க்காத அடக்குமுறைகளே இல்லை.

கரூரில் விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது ஒரு கட்சியே முடங்கிப்போனது; அதன் தலைவர் வீட்டிற்குள்ளேயே முடங்கினார், பொதுச்செயலாளர் தலைமறைவான வரலாறெல்லாம் உண்டு. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படியல்ல; வழக்கு, கைது, சிறை என அனைத்தையும் எதிர்கொண்டுதான் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம், இனி கூடுதல் வீரியத்துடன் களப்பணியாற்றி இவர்களது போலி பிம்பத்தைக் கிழித்தெறிவோம்” என்று தனது கண்டனத்தைக் காட்டமாகத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

பயங்கரவாதத்தை எங்கு எதிர்த்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்.. News 18-க்கு மார்கோ ரூபியோ அளித்த முழுமையான நேர்காணல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In