Last Updated:
டெல்லி போராட்டத்தின்போது கரப்பான் பூச்சி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தங்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறக் கோரி செப்டம்பர் 5 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது. இதனிடையே வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஜூலை 20 முதல் 25 ஆம் தேதி வரை மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரத்தில் தீவிர குற்றப்பின்னணி உள்ளோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் டெல்லி காவல்துறை தொடரலாம் என தெரிவித்தது. மேலும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தற்கொலை செய்து கொண்டோருக்கு 3 மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவது தொடர்பான கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

