Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ் | Congress MP Angomcha Bimol Akoijam at Delhi University removed over sexual harassment complaint

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ் | Congress MP Angomcha Bimol Akoijam at Delhi University removed over sexual harassment complaint
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அகோஜம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர். கூட்டங்கள் அல்லது சந்திப்பு என்று கூறி மாணவிகளை பல்கலைக்கழக வளாக குடியிருப்புக்கு அழைத்துப் பாலியல் துன்புறுத்ததலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் வகுப்பில் ஆபாசமான மற்றும் தகாத கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் சிலர் குற்றம் சாட்டினர். அதோடு தன்னுடன் உறவு வைத்துக்கொண்டால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று அவர் கூறியதாகவும் அம்மாணவிகள் தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம்

காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம்

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் உள்மட்டத்தில் குழுவை அமைத்தது. அதன் விசாரணை அறிக்கை அடிப்படையில் பேராசிரியர் அகோஜம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் வெளியிட்ட உத்தரவில், “‘பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜமுக்கு எதிராக உள் குழு (ஐசி) விசாரணை நடத்தியது. இதில் உள் குழு (ஐசி) பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமுக்குப் பெரும் தண்டனை வழங்க பரிந்துரைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, மற்றும் உள் விசாரணை குழுவின் அறிக்கையின்படி, பல்கலைக்கழகத்தின் சேவைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறார். பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீதான தண்டனை உடனடியாக அமலுக்கு வரும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அகோஜம் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கட்டப்பஞ்சாயத்து மூலம் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ”பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை என்னை துன்புறுத்தப்படுவதாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்குழுவின் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது துன்புறுத்தலைத் தவிர வேறில்லை. பல்கலைக்கழகம் அதன் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பிரச்னையை பா.ஜ.க மகளிரணி கையில் எடுத்துள்ளது. அகோஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மகளிர் அணியினர் காங்கிரஸ் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டக்காரர்கள் அகோஜம் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தனர்.



.

Previous Post

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க – வேலுமணி & டீம் ஆபரேஷன்! Thara puram, Madurantakam Bypoll Results: How TVK Is Taking Over AIADMK

Next Post

வீட்டிற்கு வெளியில் மம்தா பானர்ஜியை குத்திக்கொலை செய்ய முயற்சி: கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது | Attempt to stab Mamata Banerjee outside her home: Woman arrested with concealed knife

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வீட்டிற்கு வெளியில் மம்தா பானர்ஜியை குத்திக்கொலை செய்ய முயற்சி: கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது | Attempt to stab Mamata Banerjee outside her home: Woman arrested with concealed knife

வீட்டிற்கு வெளியில் மம்தா பானர்ஜியை குத்திக்கொலை செய்ய முயற்சி: கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது | Attempt to stab Mamata Banerjee outside her home: Woman arrested with concealed knife

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In