Tuesday, October 27, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி – லைக்டென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ் சந்திப்பு: பொருளாதார உறவை வலுப்படுத்த திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லியில் பிரதமர் மோடி – லைக்டென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ் சந்திப்பு: பொருளாதார உறவை வலுப்படுத்த திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 27, 2026 5:06 PM IST

1993-இல் இந்தியா – லைக்டென்ஸ்டைன் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த அரசுமுறைப் பயணம் இருதரப்பு வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது

News18
News18

ஐரோப்பிய நாடான லைக்டென்ஸ்டைன் செயல் தலைவரும், பட்டத்து இளவரசருமான அலோயிஸ், தனது மனைவி இளவரசி சோபியாவுடன் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இளவரசர் அலோயிஸைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லி வந்தடைந்த லைக்டென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ் மற்றும் அவரது குழுவினருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் உற்சாகமான வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது பேசிய இளவரசர் அலோயிஸ், “இந்தியாவுக்கு லிச்சென்ஸ்டைன் நாட்டின் முதலாவது அரசுமுறைப் பயணமாக வந்துள்ளதை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இந்தியாவுடனான உறவுக்கு எங்களது நாடு அளிக்கும் உயரிய முக்கியத்துவத்திற்கு இந்தப் பயணம் ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு (EFTA) இடையே கையெழுத்தாகி, 2025-இல் நடைமுறைக்கு வந்த வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்துள்ள நேர்மறையான சூழலைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பின்வரும் துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக மும்பை மற்றும் வதோதரா ஆகிய நகரங்களுக்குச் சென்றிருந்த இளவரசர் அலோயிஸ், டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் இளவரசரைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் இளவரசர் அலோயிஸ் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார்.

1993-இல் இந்தியா – லைக்டென்ஸ்டைன் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த அரசுமுறைப் பயணம் இருதரப்பு வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இளவரசரின் இந்தியப் பயணம் நாளை (அக்டோபர் 28) நிறைவடைகிறது.



.

Previous Post

‘தமிழக மக்களுக்கு ‘வெற்றி தீபாவளி’ பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது’- எடப்பாடி | edappadi palanisamy about aavin price increase

Next Post

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்’- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன? | Press Freedom Under Question: 21 News Organizations File Petition in Supreme Court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்’- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன? | Press Freedom Under Question: 21 News Organizations File Petition in Supreme Court

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன? | Press Freedom Under Question: 21 News Organizations File Petition in Supreme Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In