Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘டிஜிட்டல் ஷ்ரம் சங்கல்ப்’ ஹேக்கத்தான் 2026.. விண்ணபிக்க காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2026
in அரசியல் செய்திகள்
0
‘டிஜிட்டல் ஷ்ரம் சங்கல்ப்’ ஹேக்கத்தான் 2026.. விண்ணபிக்க காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 02, 2026 3:20 PM IST

தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் https://innovateindia.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 18, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

News18
News18

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் ஷ்ரம் சங்கல்ப்: செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவின் தொழிலாளர் சூழலை மறுவடிவமைத்தல்’ என்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் (Hackathon) போட்டிக்கான விண்ணப்பங்களின் காலக்கெடுவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு மற்றும் புதுமையான யோசனைகளைக் கருத்தில் கொண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 18, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஆகஸ்ட் 5 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் தொழிலாளர் அமைப்பைத் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இ-ஷ்ரம், தேசிய தொழில் சேவை (NCS) மற்றும் ஷ்ரம் சுவிதா போர்டல் 2.0 ஆகிய மூன்று முக்கிய டிஜிட்டல் தளங்களை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்பத் தீர்வுகளை அமைச்சகம் வரவேற்கிறது. அரசு நன்மைகளை தங்குதடையின்றி குடிமக்களுக்கு வழங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) இணைத்து அரசுச் சேவைகளை மேலும் வெளிப்படையானதாகவும் வேகமானதாகவும் மாற்றுவதே இதன் முக்கிய இலக்காகும்.

இந்த ஹேக்கத்தான் MyGov தளத்தில் உள்ள ‘இன்னோவேட் இந்தியா’ (Innovate India) போர்ட்டலில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் AI, தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) மற்றும் அமைப்புகளின் இயங்குதன்மை ஆகிய அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 12 வெவ்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகளை முன்மொழிய வேண்டும். இதுவரை நாடு முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களால் 1,368 சிறந்த யோசனைகள் இப்போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பங்கேற்பாளர்களுக்கான நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

ஒவ்வொரு பிரச்சினை அறிக்கையிலும் மிகச்சிறப்பாகச் செயல்படும் முதல் 5 யோசனைகளுக்கு மத்திய அரசு கவர்ச்சிகரமான ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளது. தகுதிபெறும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் டிஜிட்டல் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றிபெறும் யோசனைகளை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம் நேரடியாக விளக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, சிறந்த திட்டங்களை எதிர்காலத்தில் அரசு முன்னோடித் திட்டங்களாக (Pilot projects) அமல்படுத்தவும் பரிசீலிக்கும்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் யோசனைகளைச் செம்மைப்படுத்தி https://innovateindia.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 18, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



.

Previous Post

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால் அபராதம்!' – அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

Next Post

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் கேட்ட விவசாயி – என்னக் காரணம் தெரியுமா?| name removed from ration card – worker asked to produce death certificate while still alive

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் கேட்ட விவசாயி – என்னக் காரணம் தெரியுமா?| name removed from ration card – worker asked to produce death certificate while still alive

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?| name removed from ration card - worker asked to produce death certificate while still alive

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In