Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'ஜோசப் விஜய் எனும் நான்..!' – சொன்னதும் செய்ததும்… 6 மாத ஆட்சியின் குறும்படம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
'ஜோசப் விஜய் எனும் நான்..!' – சொன்னதும் செய்ததும்… 6 மாத ஆட்சியின் குறும்படம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 6 மாத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. மே 10 ஆம் தேதி பதவியேற்கும் போதே ‘எல்லாவற்றையும் சரி செய்ய கொஞ்சம் நேரம் வேண்டும்!’ எனக் கேட்டிருந்தார். பொதுச் சமூகமும் அதை ஆமோதித்தது. விஜய் கேட்ட அந்த கால அவகாசம் இப்போது முடிந்திருக்கிறது. வரவிருக்கும் நாட்களுக்கான நம்பிக்கையை விஜய் அரசு இந்த 6 மாதத்தில் உருவாக்கியிருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Vijay
Vijay

காரணம், விஜய் வாக்குறுதியாக கொடுத்த பல விஷயங்களையுமே இந்த அரசு மீறியிருக்கிறது. இந்த சமயத்தில் தேர்தல் நெருக்கத்திலும் முடிவுகளுக்கு பிறகான பதவியேற்பின்போது விஜய் என்ன பேசினார் என்பதை ஒரு குறும்படமாக மீண்டும் பார்ப்பது சரியாக இருக்கும்.

“ஒரு டீக்கடையில நிம்மதியா டீக்குடிக்க முடியல. போதையை போட்டுட்டு வந்து வெட்டிட்டு போயிடுறானுக. போலீஸ் டிபார்ட்மெண்டை கையில் வச்சிருக்க ஸ்டாலின் சார்….ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி….இந்த அதிகாரம்” மார்ச் 30 ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பெரம்பூரில் விஜய் இப்படி பேசியிருந்தார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதைத்தான் விஜய் தீவிர பிரசாரமாக முன்னெடுத்திருந்தார். நேரடியாக காவல்துறையை கையில் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலினை விஜய் குறை கூறினார். இப்போது ஆட்சி மாறிவிட்டது.

சட்டம் ஒழுங்கை விஜய் பிரதான பிரச்னையாக முன்வைத்ததால் தவெக அரசின் மீது சட்டம் ஒழுங்கு சார்ந்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அரசாங்கம் செயல்படவில்லை. தீபாவளியன்று 10 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன என அமைச்சரிடம் கேள்வி எழுப்பினால், ‘பண்டிகை காலங்களில் கொலை நடப்பது வழக்கம்’ எனும் தொனியில் மக்களை மிரட்டும் குற்றச்சம்பவங்களை நியாயப்படுத்தி பேசுகிறார்.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, டாஸ்மாக்குக்கு எதிராக போராடியவரின் வீட்டில் கஞ்சா வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு பக்கம் ஒரு காவலரே பொதுவெளியில் அடித்துக் கொல்லப்படுகிறார். பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஒருவர் எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்ய அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.

Vijay
Vijay

6 மாதங்களுக்கு முன்பு இதற்கெல்லாம் ஸ்டாலினை நோக்கி கைநீட்டி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் விஜய். இன்றைக்கு கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் விஜய் நிற்கிறார். ஆனால், நடக்கிற விஷயங்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக, ‘குற்றச்சம்பவங்கள் தனிமனித ஒழுக்கம் சார்ந்தவை’ என புதிய பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

“ஒரு எம்.எல்.ஏங்றவரு தொகுதியோட மக்களோட எல்லைக் காப்பாளரா இருக்கணும்” – தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியது.

ஒரு எம்.எல்.ஏ எப்படி செயல்பட வேண்டுமென மேடையிலேயே தன்னுடைய வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் இது. துறையூரின் எல்லைக் காப்பாளரான ரவிசங்கர் தன்னிடம் புகார் கூற வந்தவரை அடித்து தாக்கி அதன்பின் நடத்திய டிராமாக்களையும் லூட்டிகளையும் தமிழகமே அறியும். ஆனால், இன்னமும் அவர் மீது கட்சிரீதியாகவும் அரசுரீதியாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரவிசங்கரோ தன்னிடம் புகார் கொடுக்க வந்தவர் டாஸ்மாக்கில் பாட்டில் வாங்கிய வீடியோவை ரிலீஸ் செய்து நல்லவன் பட்டம் வாங்க போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவதும் மது அருந்துவதும் எப்போது சட்டவிரோத செயலானது என ரவிசங்கர்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். அப்படியே மது அருந்தியிருந்தாலும் எல்லைக் காப்பாளர்களுக்கு மது அருந்தியவர்களை கொடூரமாக தாக்கும் அதிகாரத்தை முதல்வர் விஜய் கொடுத்திருக்கிறாரா?

அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற உறுத்தல் முதல்வருக்கு இல்லையா?

Vijay
Vijay

“இது உங்களோட ஆட்சி. நான் பெண்கள் பாதுகாப்புல ரொம்ப ஸ்ட்ரிக்டா உறுதியா இருப்பேன்” – பதவியேற்பு விழாவில் பல்லைக் கடித்துக் கொண்டு விஜய் பேசிய வசனம் இது.

தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின் போதும் ஒரு ஐந்தாறு விஷயங்களை குறிப்பிட்டு வேட்பாளர்களை நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி எடுக்க வைத்திருந்தார் விஜய். அதில், ‘பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். இது சத்தியம். இது வாக்குறுதி அல்ல உத்தரவாதம்’ என்பது முக்கியமான பாய்ண்ட். விஜய் வாசிக்க இந்த உறுதிமொழியை நெஞ்சில் கைவைத்து வாசித்தவர்களில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷூம் ஒருவர்.

கள்ளக்குறிச்சியின் கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதுசம்பந்தமாக அந்த பெண் கலெக்டர் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்திருப்பதாக தகவல். இந்த விவகாரத்தை சுற்றிய அத்தனை விஷயங்களும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. அந்த எம்.எல்.ஏ மீதும் கட்சிரீதியாகவும் அரசுரீதியாகவும் எந்த நடவடிக்கையும் இல்லை. ‘என்னோட அக்கா, தங்கைகள்னு எந்த பெண்ணை தவறாக பேசினாலும் இந்த விஜய் பொறுத்துக் கொள்ளமாட்டான்’ என சட்டமன்றத்தில் விஜய் ஆவேசமாக பேசினார். ஆனால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் அத்தனை எதிர்க்கட்சிகளால் பேசப்பட்ட பிறகும் விசாரணையை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

“கஜானாவை சுத்தமா துடைச்சுட்டு போயிருக்கப்போ நம்மால என்ன பண்ண முடியும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க” – பதவியேற்பு விழாவில் விஜய் பேசியது.

கஜானா காலி என்கிற நிலைமையில் விஜய் எப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் காரையும் அதற்கான படியையும் அறிவித்தார் என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. அதேமாதிரி, 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகிறேன் என அறிவித்ததன் புதிரும் புரியவில்லை. மக்களுக்கு செய்ய வேண்டியதையெல்லாம் செய்து செழிப்பாக இருக்கும் போது அறிவிக்க வேண்டிய திட்டங்களை காலியாக இருக்கும் கஜானாவில் ஓட்டையை போட்டு அறிவிக்க வேண்டியதன் தேவை என்ன?

Vijay
Vijay

“மறைமுகமா உங்களுக்கு தெரியாம எதுவும் செய்யமாட்டேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் செய்வேன்” – இதுவும் விஜய் பதவியேற்பு விழாவில் பேசியதுதான்.

‘வெளிப்படைத்தன்மை’ என்கிற வார்த்தையை விஜய் அடிக்கடி பயன்படுத்துவார். ஆனால், அதன் அர்த்தத்தை உணர்ந்துதான் அவர் பேசுகிறாரா எனும் சந்தேகம் எப்போதுமே உண்டு. காரணம், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறையிலேயே வெளிப்படைத்தன்மை இல்லையே. முதல்வரின் அறையில் புழங்கும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிசாமியெல்லாம் யார்? அவர்கள் எப்படி முதல்வரின் அறையில் கோப்புகளை பார்க்கும் இடத்தில் இருக்கிறார்கள்? அவர்களை என்ன பணியில் அரசு நியமித்திருக்கிறது? அதற்கான அரசாணை எங்கே? சட்டம் ஒழுங்கு சம்பந்தமான சில விஷயங்களை RTI இல் தெரியப்படுத்தமாட்டோம் என ஒரு அறிவிப்பு வரும்.

விமர்சனம் வந்தவுடன் யூடர்ன் அடித்துவிடுவார்கள்.

புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில்தான் அமைகிறதா என ஒரு RTI விண்ணப்பம். எங்களிடம் அதுசம்பந்தமாக எந்த கோப்பும் இல்லை என அரசு பதில் சொல்லியிருக்கிறது. தகவல் சரிபார்ப்பு மையத்தில் யார் யாரெல்லாம் பணிபுரிகிறார்கள் எனக் கேட்கப்பட்ட RTI க்கும் இதே பதில்தான். இன்னும் கொஞ்ச நாளில் தலைமைச் செயலகத்தின் மேலேயே பெரிய போர்வையாக போர்த்தி வெளியே தெரியாமல் உள்ளே ரகசிய ஆட்சியை நடத்த முதல்வர் திட்டமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Vijay
Vijay

“பெண்கள், விவசாயிகள், மீனவர்கள்னு உழைக்கிற ஜனங்க நம்ம ஆட்சியில நல்லா இருப்பாங்க!” – பதவியேற்பு விழாவில் விஜய் கொடுத்த கியாரண்டி இது.

வாக்குறுதி கொடுத்தபடிக்கு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் இப்போது வரை போராடிக் கொண்டிருக்கின்றனர். பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டுமென தீவிரமாக இருப்பதால் மீனவர்கள் கருப்புக் கொடி பிடித்து வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதற்கும் விஜய் அரசு இப்போது வரைக்கும் எந்த முறையான பதிலையும் கொடுக்கவில்லை.

“விஜய் மாமான்னு கூப்பிடுற என்னோட குட்டி நண்பா நண்பீஸூக்கு நன்றி!” – பதவியேற்பு விழாவில் தனக்காக வாக்கு கேட்ட குட்டீஸ்களுக்கும் விஜய் நன்றி கூறியிருந்தார்.

விஜய் நன்றி சொன்ன குட்டி நண்பா நண்பீஸ்களில் ஒருவரான செஞ்சி சிறுமி காணாமல் போய் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது என்பதாவது அவருக்கு தெரியுமா?

தேர்தல் நேர தீவிர பிரசாரத்தின் போதும் பதவியேற்பின் போதும் விஜய் பேசியவைதான் இவை. வரும் நாட்களிலாவது பேசிய பேச்சுக்கான பொருள்படும்படியான நடவடிக்கைகளை விஜய் எடுக்க வேண்டும். அது தான் ஜனநாயகத்துக்கு செய்யும் கடமை.!



.

Previous Post

நெருக்கும் DMK ADMK – என்ன செய்யப் போகிறார் CM VIJAY? | Nvidia Microsoft | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In